சுடும் வெயில்... தமிழகம்,புதுச்சேரியில் ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு.... மாணவர்கள் குஷி

Posted By:

புதுச்சேரி : கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 1ந் தேதியில் இருந்து ஜூன் 7ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் ஒரு வாரம் கழித்து அதாவது ஜூன் 7ந் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சுடும் வெயில்... தமிழகம்,புதுச்சேரியில் ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு.... மாணவர்கள் குஷி

புதுச்சேரியிலும் பள்ளிகள் ஜூன் 7ந் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்கள் கூடுதலாக ஒரு வாரம் லீவு கிடைத்துள்ளதால் குஷியாக உள்ளனர்.

கோடை வெயில் காரணமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்திலேயே தேர்வுகள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு மாணவர்களுக்கு சீக்கிரமாக விடுமுறை வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கம் நீடிப்பதால் ஒரு வாரம் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளித்திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளித்திறந்த ஒரு வாரத்தில் பஸ் பாஸ்களும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்து பள்ளிகளுமே இந்த அறிவிப்பின் படி ஜூன் 7ந் தேதி திறக்கப்படும் என்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

English summary
t is expected that schools will be delayed due to heavy sunshine. Similarly, the Minister announced the opening of schools on June 7

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia