பத்து கடலோர மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை !!

Posted By:

தமிழக கடலோர மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . நேற்று கனமழை சென்னை புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்தது. இதனையடுத்து கடலோர மாவட்டங்களில் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை ஆனால் அண்ணா பல்கலைகழகம் வழக்கம்போல் செயல்படும்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,பாண்டிசேரி, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் , தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கியநிலையில் தென்மேற்கு வங்ககடலில் தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேழடுக்கு சுழற்சி உருவானது. அந்த சுழற்சி தற்பொழுது மேற்கு நகர்ந்து இலங்கை நோக்கியுள்ளது. இதனால் சென்னையில் மிகுந்த கனமழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று சென்னையில் தொடங்கிய கனமழையால் பள்ளிகளுக்கு ஒரு மணி நேரம் முன்னமே மாணவர்களை அனுப்ப மாவட்ட ஆசியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இன்னும் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது .

முன்னெச்சரிக்கை நடவடிக்கை :

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை கடலூரில் மளிகை சாமான்கள் மற்றும் இன்னப்பிற பொருட்கள் வாங்கி வைக்கின்றனர் .
சென்னை மீண்டும் தண்ணீரில் மூழ்குமோ என்ற அச்சம் சென்னை வாசிகளிடையே எழுந்துள்ளது ஆதலால் முன்கூட்டியே மக்கள் தண்ணீர், மளிகை பொருட்கள் போன்ற அனைத்து, சேகரித்து வைத்துகொண்டுள்ளனர்.

அண்ணா பல்கலைகழகம் வழக்கம் போல் செயல்படும் :

சென்னையில் மழை காரணமாக தனியார் கல்லுரிகள் விடுமுறை அளித்துள்ளன . ஆனால் அண்ணா பல்கலைகழகம் விடுமுறை அளிக்கவில்லை. வழக்கம்போல் வகுப்புகள் செயல்படும் தேர்வுகளும் அட்டவணைப்படி நடக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆங்காங்கே மழை பாதிப்பிலிருந்து எவ்வாறு மக்களை காப்பது என தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு செய்திகள் சமுக வலைதளங்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். மழைநீரை சேகரிக்க முயற்சி செய்யுங்கள் , அத்துடன் காய்ச்சிய நீரை அருந்துங்கள், பெற்றோர்களுக்கு உதவுங்கள் உடல்நலத்தை காத்து கொள்ளுங்கள் .

English summary
here article tell about leave for 10 districts due to rain

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia