மாநில பாடத்திட்டங்கள் தக்க குழுவோடு தரமானதாக உருவாக்கப்பட்ட்டு வருகின்றது

Posted By:

மாநில பாடத்திட்டம் சிபிஎஸ்சிக்கு இணையாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது .
மாநில அரசு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை புத்தகம் மாற்றுதல் என்பது விதிமுறையாகும் . ஆனால் தமிழ்நாட்டில் நீண்ட காலமாக பாடத்திட்டங்களும் புத்தமும் மாற்றமில்லாமல் இருந்தது. தமிழக அரசு ஆணை எண் 147 மற்றும் நாள் ஜூன் 30 தேதி முதல் தமிழக பள்ளி கல்வித்துறையை சிபிஎஸ்சிக்கு இணையாக மாற்ற அரசு நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது .

சிபிஎஸ்சிக்கு இணையாக பள்ளிகல்வி பாடத்திட்டங்கள் தரமானதாக உருவாக்க அரசு நடவடிக்கை

உயர்கல்விக்கு ஏற்ற வேலைவாய்ப்பு, தொழிநுட்ப வளர்ச்சி மற்றும் பள்ளி மாணவர்களை தகவல் நுட்ப கணினி பாடம், மற்றும் நவீன அறிவியல் இணைத்து கற்றுத்தர அரசு திட்டமிட்டது . நீட் தேர்வும் தமிழ்நாட்டில் பாடத்திட்ட மாற்றத்தின் முக்கிய காரணமாகும் .

புதிய பாடத்திட்டம் மாநில பாடபுத்தகங்கங்கள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி & பயிற்சி நிறுவன இயக்குநர், மாநில பாடத்திட்டம் தரமானதாக மத்திய கல்வி நிறுவனங்களுக்கு இணையானதாக மாற்ற அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது..

சிபிஎஸ்சிக்கு இணையான நிபுணர் குழு அண்ணா பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் எம்.ஆனந்த கிருட்டிணன் செயல்படுவார் .

குழுவின் உறுப்பினர் செயலராக மாநில கல்வியியல் ஆராய்ச்சி& நிறுவன இயக்குநர் க.அறிவொளி மற்றும் கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் ஆர்.இராமனுஜம், தஞ்சை தமிழ் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சுந்தரமூர்த்தி, கோவை வேளாண் பல்கலைகழக துணைவேந்தர் கு.இராமசாமி, தியோடர் பாஸ்கரன் மற்றும் சென்னை புதுக்கல்லுரி வேந்தர் சுல்தான் அகமது இஸ்மாயில் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் ,

கல்வியாளர் கலாவிஜயகுமார் போன்றோர் பாடத்திட்டங்களை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மேலும் தேவைப்படும்போது துணை குழு அமைத்து பாடத்திட்டம் தயாரிக்கும் பணியை முடித்திட மாநில கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர்க்கு அரசாணை.

சார்ந்த தகவல் :

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும் 

English summary
Here article mentioned about new syllabus making team for Tamilnadu sate board school

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia