தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம்

Posted By:

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டுவர பரிந்துரை செய்ய மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரத்தை சேர்ந்த செய்யது அம்மாள் மேல்நிலை பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் 2010ல்தான் சம்ச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது எந்த வித வேறுபாடு அற்ற ஒரே கல்வி முறை கொண்டுவரப்பட்டது .
இருந்தும் நீட் தேர்வு எழுதும் அளவிற்கு தமிழக மாணவர்கள் பாடத்திட்டம் தரமானதாக இல்லை ஆகவே நீட் தேர்வை எதிர்கொள்ள சிரமத்தில் சிக்கினார்கள்.

சிபிஎஸ்இ பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளில் கொண்டு வந்தால் தேர்வுகள் எளிதாகும்


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமுல்படுத்த வேண்டும் . அப்பொழுதுதான் அனைத்து மாணவர்களாலும் மத்திய அரசின் தேர்வுகள் அனைத்தையும் எதிகொள்ள முடியும் கேரளா போன்ற மாநிலங்கள் சிபிஎஸ்இ திட்டத்தில் இருப்பதால் அந்த மாணவர்களால் நீட் , ஜேஇஇ தேர்வு எளிதாக எதிர்கொள்ள முடிகின்றது .  
சிபிஎஸ்இ மீண்டும் மறு ஆய்வு நடத்துவதால் மாணவர்கள் அவற்றை அறிந்து வைத்து கொள்கின்றனர் . ஆனால் தமிழகத்தில் அம்முறையில்லை இது தொடர்பாக அரசுக்கு  மனு அனுப்பியாதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து நீதிபதிகள் கே.கே. சசிதரன் மற்றும் ஜி.ஆர். சாமிநாதன் முன்னிலையில் விசாரித்து தமிழக கல்வித்துறை செயலர்க்கு நோட்டீஸ் அனுப்ப ஜூலை 24க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீட் தேர்வின் மூலம் தமிழக அரசின் பாடத்திட்டங்களின் தரம் மாற்றியமைக்கப்படுகிறது . இந்தாண்டு முதல் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படுவாதாகவும் பாடத்திட்டங்கள் மாற்ற்போவதாக அரசு செயல்பாடுகள் அறிவிக்கின்றன. அதற்கு பதில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை    ஏற்கலாம் அவ்வாறு ஏற்கும்போது மாணவர்கள் எளிதாக எந்த தேர்வையும் எதிர்கொள்ள முடியும். 

சார்ந்த தகவல்கள் :

தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும்

English summary
here article mentioned cbse syllabus is a best tool of tamilnadu students to face all examination

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia