சென்னை : கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்கள் திறப்பு ஜூன் 1ந் தேதியில் இருந்து ஜூன் 7ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கோடை வெயில் கொளுத்துவதால் பள்ளிகள் ஒரு வாரம் கழித்து அதாவது ஜூன் 7ந் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெற்றோர்கள் மாணவர்கள் எதிர்பார்த்த படியே பள்ளி திறப்பு தள்ளி போகியுள்ளது. அதிகாரிகள் ஆலோசனை செய்து ஜூன் 7ந் தேதி பள்ளிகள் திறக்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பள்ளித்திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவ மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளித்திறந்த ஒரு வாரத்தில் பஸ் பாஸ்களும் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்து பள்ளிகளுமே இந்த அறிவிப்பின் படி ஜூன் 7ந் தேதி திறக்கப்படும் என்பதால் மாணவர்களும், பெற்றோர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












