பள்ளி இறுதிப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு.. வழிகாட்டல் பயிற்சி.. அனைவரும் வாரீர்!

Posted By:

சென்னை ; தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் மாநிலக் கல்வியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2016 - 2017ஆம் கல்வியாண்டில் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டல் பயிற்சியினை 20.03.2017 இன்று டி.பி.ஐ வளாகத்தில் எஸ்.ஐ.இ.எம்.ஏ.டி கூடத்தில் 3 மணியளவில் நடத்தவிருக்கிறது.

வழிகாட்டல் பயிற்சிக் கூட்டத்தில் பள்ளி இறுதிப்படிப்பை முடிக்கவிருக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள், மேற்படிப்புக் குறித்த விபரங்கள், போட்டித் தேர்வு மற்றும் வேலை வாய்ப்புச் சார்ந்த அறிவுரைகளை வழங்க உள்ளது.

பள்ளி இறுதிப் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு.. வழிகாட்டல் பயிற்சி.. அனைவரும் வாரீர்!

மாணவர்கள் தங்கள் உயர்படிப்பினை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்துப் படிக்கும் வகையில் உள்ள மேற்படிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வழிகாட்டல் பயிற்சி அமையும்.

வேலைவாய்ப்புக்கான பல்வேறு புதிய துறைகளை அறிமுகப்படுத்தும் வகையிலும், வேலை வாய்ப்புக்களை மாணவ மாணவியர்கள் பெற்றுக் கொள்வதற்கு தங்களை எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில், கருத்துக்களை உள்ளடக்கியவாறு இந்த பயிற்சி வழிகாட்டல் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநில அளவில் முதன்மைக் கருத்தாளர் பயிற்சி, மாவட்ட அளவில் கருத்தாளர் பயிற்சி, மாநகராட்சி / நாகராட்சி மற்றும் ஒன்றிய அளவில் மாணவர்களுக்கான வழிகாட்டல் கூட்டம் என மூன்று நிலைகளில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

மாணவர்கள் போட்டித் தேர்வு, மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பற்றி அறிந்து கொள்வதற்கு ஏற்ற பயனுள்ள வகையில் இந்த வழி காட்டல் பயிற்சி தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடை பெறும் இடம் -

கல்லூரி சாலை,
டி.பி.ஐ வளாகத்தில் உள்ள எஸ்.ஐ.இ.எம்.ஏ.டி கூடம்,
சென்னை - 600 006

English summary
School Education Research and Training Institute of the State Government of Tamil Nadu has announced Guidance Training.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia