நாளை தொடங்குகிறது தேர்வு.. பிளஸ்டூ மாணவ மணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து!

Posted By:

சென்னை : நாளை மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. 12ம் வகுப்புத் தேர்வு மார்ச் 2ம் தேதி நாளை தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதரை லட்சம் மாணவர்கள் நாளை 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத உள்ளனர். தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் ஆயத்தப்படுத்தப் பட்டிருக்கின்றன.

நாளை 12ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குவதையொட்டி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளரைச் சந்தித்து 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நாளை தொடங்குகிறது தேர்வு.. பிளஸ்டூ மாணவ மணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்து!

தமிழகம் கல்வியில் முதல் மாநிலமாக சிறந்து விளங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

நீட் போன்ற தேசிய தகுதித் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் வரும் கல்வியாண்டில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதுக் குறித்து இன்னும் ஒரு வார காலத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தனியாருடன் இணைந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு பயிற்சி செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறை குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மாணவ மாணவியருக்கான செயல்படுத்தும் மையம் ஒன்றும் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் மேலும் அவர்களுக்கு வழி காட்டும் விதத்திலும் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

English summary
School education minister mr.K.A. sengottaiyan has announced congratulations to all the students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia