டல்லா படிக்கிறவங்கள நல்லாப் படிக்க வைங்க... பள்ளி நிர்வாகங்களே!

Posted By:

சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்பது லட்சம் மாணவர்கள் பிளஸ்-1 முடித்து பிளஸ்-2 போகிறார்கள். அவர்களில் டல்லாக படிக்கும் மாணவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள்.

50 சதவீதத்திற்கும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களின் பட்டியலை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் தயாரித்துள்ளன. அவர்களை பள்ளி நிர்வாகமே கட்டாயமாக வெளியேற்றுவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், டல்லாக படிக்கும் மாணவர்களை வடிகட்டி பள்ளிகள் கட்டாயமாக வெளியேற்றுகின்றன. அந்த மாணவர்கள், மற்ற பள்ளிகளிலும் சேர முடிவதில்லை. எனவே, இந்த பிரச்னைக்கு, பள்ளிக் கல்வித்துறை முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகார் தெரிவிக்கலாம்

பள்ளிகளிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், மாணவர்கள், உடனே தங்கள் பெற்றோருடன் சென்று, பள்ளிக் கல்வி அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.
சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, பள்ளிக் கல்வி செயலர் அலுவலகம், நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம்; சைாதாப்பேட்டை, பனகல் மாளிகையிலுள்ள, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். மேலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், புகார் மனு அளிக்கலாம் என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பள்ளி நிர்வாகம்

டல்லாக படிக்கும் மாணவர்களை பள்ளி நிர்வாகமே வெளியேற்றுகிறது என்பது தவறான செயலாகும். நல்லப் படிக்கும் மாணவர்கள் அவர்களே படித்துக் கொள்ளுவார்கள். டல்லாகப் படிக்கும் மாணவர்களை நன்றாகப் படிக்க வைப்பதற்காகத்தானே ஒரு பள்ளி நிர்வாகம் செயல்பட வேண்டும். டல்லாகப் படிக்கும் மாணவர்கள் மீது கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய பொறுப்பு பள்ளி நிர்வாகத்திற்கு உள்ளது.

100% தேர்ச்சி

அனைத்து மாணவர்களும் சமமானவர்கள்தான். ஆனால் ஒவ்வொரு மாணவர்களின் சூழ்நிலை மற்றும் அவர்களுடைய ஆர்வம் ஆகியவைகள் வித்தியாசமாகத்தான் கட்டாயம் இருக்கும். அவைகள்தான் பெரும்பாலும் அவர்களை உருவாக்குகிறது. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அதிகமாக கோச்சிங் கொடுத்து தங்கள் பள்ளிகள் மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள். அது தப்பல்ல. ஆனால் அதோடு நன்றாகப் படிக்காத மாணவர்கள் மீதும் தனிக் கவனம் செலுத்தி அவர்களுக்கு புரியும் வகையில் அவர்களுக்கு படிப்பில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அக்கறையோடும் அன்போடும் பள்ளி நிர்வாகம் செயல்பட்டால் கட்டாயம் உங்கள் பள்ளி 100% தேர்ச்சி பெறும் பள்ளியாக மாறும் என்பதில் ஐயமில்லை.

கூடுதல் அக்கறை

டல்லாக படிக்கும் மாணவர்கள் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம் அல்லது ஆசிரியர் சொல்லித் தருவது புரியாமல் இருக்கலாம். வீட்டுச்சூழல் அவர்களுக்கு சரியில்லாமல் இருக்கலாம், தங்கள் எதிர்காலத்தைக் குறித்து ஒரு நோக்கம் இல்லாமல் இருக்கலாம். இப்படி பலக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் 10 அல்லது 15 மாணவர்கள்தான் மிகவும் சுமாராகப் படிக்கும் மாணவர்களாக இருப்பார்கள். கட்டாயம் ஆசிரியர்கள் அவர்கள் மீது கூடுதல் அக்கறைச் செலுத்தி அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு அவர்களை அனுகும் போது கட்டாம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

மகத்தான பணி

மாதா பிதா குரு தெய்வம் என்று படித்துள்ளோம். அம்மா அப்பாக்கு பிறகு ஒரு ஆசிரியர்தான் மாணவர்களை உருவாக்கும் மகத்தான பணியில் உள்ளார்கள். அந்த மகத்தான பணிக்கு தெய்வம் பின் நின்று துணை செய்வார். என்பதால்தான் தெய்வத்திற்கு நான்காவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. டல்லாப் படிக்கும் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சிறப்புவகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அவர்கள் மேல் பள்ளி நிர்வாகம் கூடுதல் அக்கறை எடுத்து அவர்களையும் நல்ல மாணவர்களாக உருவாக்க வேண்டும். அதைச் செய்யாமல் பள்ளி நிர்வாகம் டல் மாணவர்களுக்க டிசி கொடுக்க கூடாது.

English summary
About nine lakh students in Tamilnadu Plus-1 will go to Plus-2. The school is forced to evacuate the students.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia