உதவித்தொகையுடன் அமெரிக்காவில் படிக்கனுமா விண்ணப்பியுங்கள் !!

Posted By:

கல்வி உதவிதொகை பெறும் வாய்ப்பு மேலாண்மை துறையை சேர்ந்தவரா நீங்கள் அமெரிக்கா மற்றும் இந்திய அறக்கட்டளை சார்ப்பாக இந்தியவில் தங்கி மேலாண்மை துறையில் ஈடுபடுவோர்க்கான அமெரிக்க கல்வி உதவிதொகை பெற ஒரு வாயப்பு கிடைத்துள்ளது அதனை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் .

அமெரிக்காவில் படிக்கலாம் கல்வி உதவிதொகையுடன் விண்ணப்பியுங்கள்

அமெரிக்க கல்வி அறக்கட்டளை USIEF சார்பாக பல்வேறு உதவிதொகைகள் பெறுவதற்கான வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் . புல்பிரைட் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப கழகம் வழங்கும் மேலாண்மை பயில்வதற்கான கல்வி தொகை பெறலாம் .

கல்விஉதவிதொகை பெற பென்சிலேவேனியா மாகாணத்தில் அமைந்துள்ள கார்னேஜ் மெலன் பல்கலைகழகத்தின் டெப்பர் ஸ்கூல் ஆஃப் பிசினசில் பயில வேண்டும் .

இவ்வுதவி தொகை பெறும் மாணவர்களுக்கு பெருபன்மையாக செய்யப்படும் செலவுகள் அனைத்தும் பெறலாம் . விமான கட்டணம் மற்றும் விபத்து காப்பீடும், மருத்துவ சலுகைகள் என அரசாங்க வழிமுறைகள் அனைத்தும் பெறலாம் .

பட்டம் பெற்றிருப்பவருடன் ஐந்தாண்டு நிர்வாகப்பணி அனுப்பவம் பெற்றிருக்க வேண்டும் வயது 45க்குள் இருக்க வேண்டும் . இந்தியாவில் வசித்து வருபவராக இருக்க வேண்டும் அமெரிக்காவில் தங்கி இருப்பவர் கிரீன்கார்டு பெற்றிருப்பவராக இருக்க கூடாது . இம்மாத இறுதிக்குள் விண்ணப்பியுங்கள் .

இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க தேவையான இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் இந்த இணைப்பை பயன்படுத்தி விருப்பமுள்ளோர் கல்விஉதவி தொகை பெற்றுகொள்ளலாம் . முயற்சி திருவிணையாக்கும் , கற்றலின் தாகம் உள்ளோனுக்கும் கடல்பரப்பு காலடி அளவாகும் . 

சார்ந்த பதிவுகள்:

கேம்பிரிஜ் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பக்க தயாராகுங்க !! 

இன்ஸ்பையர் திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about scholarship of USIEF
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia