தேசிய அறிவியல் அகாடமி வழங்கும் கல்வி உதவித்தொகை

Posted By:

இந்திய தேசிய அறிவியல் அகடமி வழங்கும் கல்விஉதவிதொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்க தயாராகுங்கள்,

இரவு என்ற ஒன்றையும் உறக்கம் என்ற ஒன்றையும் நீ படைக்காமல் இருந்திருந்தால் மனிதன் 20 வயதுக்கு மேல் வாழ்ந்திருக்க மாட்டான் . என்ற கண்ணதாசன் வரிகள் நினைவில் வைத்துதான கூறுகிறேன் .

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

20 வயதுவரை இளைமை இருக்கிறதனால் இளைமையில் கல் என்ற பழமொழியை வைத்து கூறுகிறேன். இளமையில் நீ கற்கும்பொழுதுதான அது எந்த கல்வியாக இருந்தாலும் சரி உன்னை பல படிகளை ஏற்றிவிடும் .

ஏட்டு கல்வியும் ஏர்ப்பிடிக்கும் கல்வி அல்லது எலக்டிரானிக்கல்
கல்வியானாலும் எதுவும் எளிதாக கிடைப்பதில்லை நாம் எந்தளவிற்கு பயணிக்கின்றோமோ அந்தளவிற்கு அது குறித்து தெளிவான ஒரு பயணம் இருக்க வேண்டும் . அந்த கற்றலில் நாம் சந்திக்கவிருக்கும் தடையென்றால் அது கல்வி கற்க வசதியின்மை அல்லது நமது கனவை திறக்க சரியான வழிக்காட்டி இருப்பத்தில்லை அது குறித்து நாம் நீண்ட யோசனையில் கழிப்பதென்னவோ உண்மைதான். ஆனால் உங்களுக்கு கல்வி கற்க சரியான செய்தியை அத்துடன் நீங்கள் தடையில்லா கல்வி கற்க அரசு செய்துள்ள கல்விஉதவித் தொகை பெறுவது குறித்து அறிந்து கொள்ள கேரியர் இந்தியா கல்வித்தளம்  வழிகாட்டுகிறது .

பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது கல்லுரி பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களா, உங்களுக்கான கல்வித் உதவித்தொகை பெறும் தகவலை கேரியர் இந்தியா வழங்குகிறது .

10 வகுப்பில் 70% சதவிகித மதிபெண்கள் பெற்றிருப்பவர் அல்லது 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தை தேர்வு செய்துள்ள மாணவர்களா உங்களுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பு 

10 வகுப்பு படிக்கும் 60 மாணவர்கள்,
12 வகுப்பு படிக்கும் 60 மாணவர்களுக்கு  கல்வி உதவிதொகை வழக்கப்படும் .

கல்லுரி மாணவர்கள் பொறியியல் மாணவர்கள் 25 பேர்க்கும் , மருத்துவம் படிக்கும் மாணவர்கள் 25 பேர்க்கு கல்வி உதவிதொகை வழங்கப்படும் . நீங்கள் அறிவியல் ஆய்வில் பங்கேற்றுள்ள மாணவர்களெனில் விண்ணப்பிக்கலாம் .

கல்வி உதவித்தொகை பெற கல்லுரி மாணவர்கள் பொறியியல் படிப்பான பிஇ மற்றும் பிடெக் இரண்டாம் ஆண்டு முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் .

சார்ந்த பதிவுகள்:

உதவித்தொகையுடன் அமெரிக்காவில் படிக்கனுமா விண்ணப்பியுங்கள் !!

கல்வி உதவிதொகை பெறும் காலம்

பத்து வகுப்பு முதல் எம்எஸ்சி மாணவர்கள் வரை கல்வி உதவித்தொகை பெறலாம்.
பொறியியல் மாணவர்கள் எம். இ மற்றும் எம்டெக் வரை
மருத்துவ மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிவிஎஸ்சி படிப்புகாலம் முடியும் வரை பெறலாம் .

பத்தாம் மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தகுதி திறன் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பொறியியல் மற்றும் கல்லுரி மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்து பெறலாம் . மேலும் சலுகையைப்பற்றி அறிய கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பில் சென்று அறிந்து கொள்ளுங்கள் .

முகவரி :

தி எக்ஸ்கியூட்டிவ் செக்கிரட்டரி,
இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாடமி,
பகதூர்ஷா ஜாஃபர் மார்க் ,
நியூ டெல்லி, 110002

சார்ந்த பதிவுகள்:

மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்விஉதவி தொகை !!  

பிஹெச்டி படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும் 

English summary
here article tell about scholarship details for science students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia