மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி தொகை

Posted By:

கல்வி உதவி தொகையின் தேவை இன்றியமையாதது ஆகும் . இதனை அறிந்தோர் மிக குறைவு . மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான கல்வி உதவி தொகை வழங்குவது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ள சலுகையை பெற காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு விடுத்துள்ளார் .

கல்வி உதவிதொகை பெற மாற்று திறனாளி மாணவர்களுக்கான வாய்ப்பு

மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெற காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்பு செய்துள்ளார் .
மத்திய அரசின் சமுக நீதி அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு கல்வி உதவிதொகை வழங்கப்படும் .
10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூபாய் 8645 முதல் ரூபாய் 46000 வரையிலும் 11, 12 வகுப்பு முடித்தவர்களுக்கு பிஏ, பிஎஸ்சி, பிகாம், மருத்துவ படிப்பு படிக்க  ரூபாய் 15000 முதல் 1 லட்சம் வரை வழங்கப்படுகிறது .
மேலும் பட்ட மேற்ப்படிப்புக்கு ஆராய்ச்சி படிப்பு படிக்க ரூபாய் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது .

இந்த உதவி தொகையில் கல்லுரி கட்டணம், விடுதி கட்டணம் ,புத்தகம் வாங்கும் கட்டணம் , போக்குவரத்து உதவி தொகை , கணினி வாங்குவதற்கு உதவி தொகை ஆகியவை வழங்கப்படுகிறது . இதற்காண விண்ணப்பத்தை அந்தந்த கல்லுரி முதல்வர்கள் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலரை அலுவலக தொலைபேசியில் அழைத்து விவரங்கள் பெறலாம் .

மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ள 044-27431853 எண்ணை பயன்படுத்தலாம் . இவ்வாறு வழங்கப்படும் கல்வி உதவி தொகை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்தால் நன்மை பயக்கும் . மேலும் இத்தகைய உதவிதொகை விவரங்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் . அதன் மூலம் பலருக்கு தேவையான உதவிகள் சென்றடையும் என்பதில் மாற்று கருத்தில்லை.

சார்ந்த பதிவுகள் :

கல்லுரி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை பெறும் முறைகள் அறிவோம்

தொடங்கியது.. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழிகாட்டும் முகாம் ! 

English summary
above article tell about central government scholarship for differently able students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia