சைனிக் பள்ளிகளுக்கான உதவித்தொகை இரட்டிப்பானது!!

சென்னை: ஹரியாணா மாநிலத்துள்ள சைனிக் பள்ளிகளுக்கான உதவித்தொகை நிதியை அந்த மாநில அரசு இரட்டிப்பாக்கி உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பிறப்பித்துள்ளார். ஹரியாணா மாநிலத்திலுள்ள குஞ்சபுரா, ரேவாரி பகுதியிலுள்ள ராணுவப் பள்ளிகளுக்கான உதவித்தொகை நிதி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது இதுவரை ரூ.25 ஆயிரம் நிதி பெற்று வந்த அந்தப் பள்ளிகள் இனி ரூ.50 ஆயிரம் நிதியைப் பெறும்.

இதைத் தொடர்ந்து அந்த 2 சைனிக் பள்ளிகளும் ஆண்டுதோறும் ரூ.3.62 கோடி நிதியைப் பெறும் எனறு தெரியவந்துள்ளது. குஞ்சப்புரா சைனிக் பள்ளியின் முதல்வர் கர்னல் ஒய்.எஸ். பார்மர் இத்தகவலைத் தெரிவித்தார்.

இதேபோல ரேவாரி சைனிக் பள்ளியின் முதல்வர் குரூப் கேப்டன் ராஜீவ் சர்மாவும் இத்தகவலை உறுதி செய்தார்.

மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாக சைனிக் பள்ளிகள் திகழவேண்டும். சைனிக் பள்ளிகளைப் போல மற்ற பள்ளிகளும் கல்வித்திறனை பெற்றிருக்கவேண்டும். அதற்காக கல்விக்கு அதிக முக்கியத்துவத்தை ஹரியாணா மாநில அரசு தருகிறது என்று மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Haryana government has doubled the scholarship amount being given to cadets of Sainik Schools at Kunjpura and Rewari. Chief minister Manohar Lal Khattar, who was presiding over a review meeting of functioning of Sainik Schools in Chandigarh.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X