ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: ஒற்றைச் சாளர இணையவழி கவுன்சிலிங் இன்று தொடக்கம்

Posted By:

சென்னை: தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 1) முதல் நடைபெற உள்ளது.

இதற்கான இணையவழி கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில்(சிங்கிள் விண்டோ சிஸ்டம்) அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 30 மையங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நடைபெறும்.

ஆசிரியர் டிப்ளமோ படிப்பு: ஒற்றைச் சாளர இணையவழி கவுன்சிலிங் இன்று தொடக்கம்

இந்தக் கலந்தாய்வில் மொத்தம் 2,759 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் உள்ளன. எனவே, கலந்தாய்வில் பங்கேற்கும் அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்ற பின்னர் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் இந்தப் படிப்புகளுக்கு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கான இடம், நாள், நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கே கவுன்சிலிங் தொடங்குகிறது.

தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு நடைபெறும் இடம் அனைத்தும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணையதளமான www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Admission to the first year Diploma in Elementary Education is made online. All the applicants are ranked category-wise on the basis of Higher Secondary marks secured by them and as per Government norms in vogue. Counselling is conducted by the Selection Committee at the State Council of Educational Research and Training through online. The candidates come to the counselling centre at the District head quarter in each district.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia