5 ஆயிரம் கிளார்க்குகளை நியமனம் செய்யப் போக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

Posted By:

சென்னை: ஐந்தாயிரம் கிளார்க்குகள், 2 ஆயிரம் புரோபேஷனரி அதிகாரிகளை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(எஸ்பிஐ) விரைவில் நியமனம் செய்யவுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 700 புதிய வங்கிக் கிளைகளைத் திறக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது. இதன்மூலம் எஸ்பிஐ வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயரும்.

5 ஆயிரம் கிளார்க்குகளை நியமனம் செய்யப் போக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

இந்த புதிய வங்கிக் கிளைகளில் பணியாற்றுவதற்காக 7 ஆயிரம் வங்கி அலுவலர்களை நியமனம் செய்யவுள்ளது எஸ்பிஐ. இதில் 5 ஆயிரம் கிளார்க்குகள், 2 ஆயிரம் புரோபேஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்பவுள்ளது எஸ்பிஐ.

நடப்பு நிதியாண்டில் இதுவரை 100 புதிய வங்கிக் கிளை எஸ்பிஐ தொடங்கியுள்ளது. புதிதாக நியமனம் செய்யப்படும் அதிகாரிகள் புதிய வங்கிக் கிளைகளிலும், ஏற்கெனவே உள்ள கிளைகளிலும் பணியமர்த்தப்படுவர்.

தற்போது 2 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ளது எஸ்பிஐ. இதன்மூலம் வங்கி்த் துறையில் அதிக ஊழியர்களைக் கொண்டுள்ள பெருமையைப் பெற்றுள்ளது எஸ்பிஐ. மேலும் இந்த ஊழியர்களில் 45 ஆயிரம் மாற்றுத் திறனாளி ஆண் ஊழியர்களையும், 2,500 மாற்றுத் திறனாளி பெண் ஊழியர்களையும் கொண்டுள்ளது வங்கியாகும் இது.

E-wallet என்ற செல்போன் ஆப்ஸ்-ஐயும் அறிமுகம் செய்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரையும் கவர்ந்துள்ளது எஸ்பிஐ.

English summary
The State Bank of India has made a major recruitment announcement stating that it will hire 7,000 people in the current financial year. The bank is planning to recruit 2,000 probationary officers and 5,000 clerks. SBI to set up 700 branches The bank is contemplating to establish 700 branches this year taking the count to more than 17,000. Around 100 branches had already been set up earlier this year and the remaining ones will be established in coming few months. The recruitment will be made to fill in the requirements of the branch expansion and the regular needs of the bank. Following the increase in competition and customer demands, the bank will expand their branches and will have a variety of channels.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia