சாதனை பெண்கள் சாவித்ரி பாய் மற்றும் வேலு நாச்சியாரின் பிறந்த தினம் இன்று

சாவித்ரி பாய் பூலே மற்றும் வேலு நாச்சியாரின் பிறந்த தினத்தில் அவர்களது சாதனைளை நினைவு கூறுவோம்.

By Sobana

வேலு நாச்சியார் :

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுப்பட்ட முதல் பெண் பேரரசி என்ற பெருமை கொண்டவர். ஆங்கிலேய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர். வேலு நாச்சியார் அங்கிலேயே படைகளை தினரடித்தவர் வேலு நாச்சியார் அவரின் பிறந்த தினம் இன்று ஜனவரி 3, 1730 ஆகும்.

சாதனை பெண்கள் பிறந்த தினத்தை போற்றுவோம் பின்ப்பற்றுவோம்

1746 ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதரை மணந்து பட்டத்து ராணியாக மகுடம் சூடி பெருமை பெற்றார் வேலு நாச்சியார். தன் கனவரை கொன்ற ஆங்கிலேயே படைதளபதிகளான ஸ்மித் மற்றும் பாஞ்சோர் ஆகியேரையும் ஆங்கிலேயரையும் வீழ்த்த மிகுந்த வீரமுடன் செயல்பட்டார்.

விருப்பாச்சி கோபால நாயக்கரிடம் நட்பு கொண்டு மைசூரின் ஹைதர் படையை எதிர்த்து நின்று வெற்றி பெற்றார். 1780 முதல் 1789 வரை நேரடி ஆட்சியாளராக சிறப்பாக ஆட்சி செய்தார். 1796ன் 66 வயதில் மரணமடைந்தார்.

சிறப்பான ஆட்சியை வழங்கிய வேலு நாச்சியார் அவர்கள் மக்களுக்கு சிற்பான ஆட்சியை வழங்கி திறம்பட ஆட்சி செய்ததுடன் ஆங்கிலேயரை எதிர்த்து நின்று வீரமுடன் செயல் பட்டார். காந்தியோ உடன் மற்ற எந்த எழுச்சி சக்தியும் உடன் இல்லை ஆனால் வீரம் ஆழும் நிர்வாகம், மக்கள் நலன் ராஜ நிர்வாகம் அறிந்து வைத்திருந்தார் .

அவரின் அனுகுமுறை சிறப்பன வழிகாட்டியாக இருந்தது. இவரை பார்த்து பெண்கள் கற்று கொள்ள வேண்டும். முதல் எழுச்சி வீரங்காணையாக இருந்த இவர் இந்திய விடுதலை போராட்டவாதிகளுக்கெல்லாம் முன்மாதிரியாக இருந்தார எனில் அது மிகையாகது இவர் கட்ட மொம்முவுக்கு எல்லாம் முன் மாதிரியாக இருந்திருக்கிறார் எனில் அது குறிப்பிடதக்கதாகும்.

சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த தினம் :

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பெணகளுக்கான உரிமை மற்றும் கல்வி போராட்டத்தில் பங்கேற்று பெணகளின் உரிமையை நிலைநாட்ட போராடிய பெண்களில் முக்கியான ஒருவரான சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த தினம் இன்று.

சாதனை பெண்கள் பிறந்த தினத்தை போற்றுவோம் பின்ப்பற்றுவோம்

சாவித்ரி பாய் பூலே ஜனவரி 3, 1831 ஆம் நாள் பிறந்தார் இவர் ஜோதிராவ் பூலே என்னும் சுதந்திர போராட்டவாதியின் மனைவியாவார். பனிரெண்டாம் வயதில் திருமணம் செய்த சாவித்ரி பாய் பூலே கணவரிடம் கல்வி கற்று பெண்களின் கல்வி மற்றும் உரிமைக்கு முதல் குரல் கொடுத்தவர் ஆவார்.

முதல் பெண்கள் பள்ளி :

சாவித்ரி பாய் பூலே பெண்களுக்காக முதல் பள்ளியை கணவருடன் இணைந்து பூனேவில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கினார். சாதிய வெரியையும் அத்துடன் இணைந்து பாலின வேறுபாடுகள் பெண்கள் மீது காட்டுவதனை எதிர்த்து குரல் கொடுத்தார்.

முக்கிய பெண் சீர்த்திருத்தவாதி:

1840 களில் கத்தியில்லை ரத்தமில்லை காந்தியும் இல்லை ஆனால் சாவித்ரி இருந்தார் . எந்த ஒரு சிப்பாய் கழகமமும் நடைபெறவில்லை . ஆனால் இந்தியாவில் ரௌத்திரம் பழகும் திறம் இருந்தது. இந்திய விடுதலை போராட்டத்திற்கு முன்பே சமுக சீர்த்திருத்ததை நாட்டில் விதைத்தார் ஒரு பெண்ணாக இருந்து பழமை வாய்ந்த சமுகத்திற்கு பாடம் கற்பிப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பதனை நாம் கற்பனை செய்து பாக்ககூட முடியாது.

சாவித்ரி பாய்பூலே குழந்தைகள் இல்லாத போதும் இரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். சாவித்ரி எழுதிய பெண்களுக்கான கவிதைகள் மிக எழுச்சி வாய்ந்த கவிதைகளை படைத்தர்.

சாவித்ரி மற்றும் வேலு நாச்சியார் இதே தேசத்தில் எந்த வித முன்னேற்றமும் அற்ற ஒரு சமுதாய சூழலில் வேறு வேறு சூழல்களில் பிறந்தவர்கள் ஆவர்கள் அவர்களின் மூலம் சிறந்த நிர்வாகம் எது என்பதையும் எது மக்களை கொண்டு செல்லும் நிர்வாகம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் பிறந்த ஒரு ஆட்சியாளர் பெண்மனியும் ஒரு சமுக சீர்த்திருத்த பெண்மனியின் வாழ்க்கை மற்றும் அவர்களின் செயல்படுகளை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

மாணவ மாணவிகளுக்கு மட்டும் தேசத்தின் அனைத்து மக்களுக்கும் இவர்கள் ஒரு பாடமாக அமைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

46வது நேவிதின கொண்டாட்டம் நாடு முழுவதும் உள்ள நேவிதளங்கள் அணிவகுப்பு46வது நேவிதின கொண்டாட்டம் நாடு முழுவதும் உள்ள நேவிதளங்கள் அணிவகுப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here the article tells about Birthday special of Savithribhai phule and Velu Nachiyar
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X