திருப்பூர் சைனிக் பள்ளியில் சேர்க்கை அறிவிப்பு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க !

Posted By:

சைனிக் பள்ளியில் மாணவர்கள் ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புக்கு இணைய அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறையால் நடத்தப்படும் சைனிக் பள்ளியானது திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டை வட்டம் அமராவதியில் இயங்குகின்றது. இப்பள்ளியில் 2018 -2019 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிக்கை வெளியடப்பட்டுள்ளது.

சைனிக் பள்ளியில் மாணவர்கள் பயில விண்ணப்பிக்கலாம்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் நுழைவு தேர்வு எழுத வேண்டும் . நுழைவு தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எழுதலாம். ஆனால் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். ஆறாம் வகுப்பு சேர்க்கைக்கு பத்து வயது முதல் 11 வயது முடியாமலும் அத்துடன் 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு ஜூலை 1, 2008 ஆம் ஆண்டிற்குள் பிறந்திருக்க வேண்டும். ஒன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கு 15 மாணவர்கள் சேர்க்க படுவார்கள். ஆறாம் வகுப்புக்கு 90 மாணவர்கள் சேர்க்கப்படுவார்.

அமராவதி சைனிக் பள்ளியில் சேர்க்க விருப்பமுள்ள மாணவர்கள் டிசம்பர் 5க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிடப்படும் முகவரிக்கு அனுப்ப வேண்டும் . ஆண்டு வருமானத்தை கனக்கில் வைத்து மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை கல்வி உதவித்தொகை பெறலாம். விண்ணப்ப கட்டணமாக சைனிக் பள்ளியில் பொதுப்பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூபாய் 250 தொகை செலுத்த வேண்டும். நவம்பர் 30 வரை சைனிக பள்ளியில் மாணவர்களுக்கு விண்ணப்ப விநியோகம் அளிக்கப்படும் .

சைனிக் பள்ளி முகவரி :
முதல்வர்,
சைனிக் பள்ளி,
அமராவதி,
உடுமலைப் பேட்டை வட்டம்
திருப்பூர் மாவட்டம்,
642102
சைனிக் பள்ளியில் இணைய தேவையான தகவல்களை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04252- 256246, 256296,
மேலும் அதிகர்ப்பூர்வ இணைய தள இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். மத்திய அரசின் மிகச்சிறந்த பள்ளியாக கருதப்படும் சைனிக் பள்ளியில் இணைய டிசம்பர் 5க்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

சார்ந்த பதிவுகள் :

மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையளிக்க தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்கலாம்

பள்ளிகள் இனறு முதல் திறப்பு மழைகாரணமாக கொடுக்கப்பட்ட விடுமுறை முடிவு!

English summary
here article tell about sainik school admission for students

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia