மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் இல்லம் தேடிக் கல்வி!

தமிழக அரசால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வித் திட்டம் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற கூற்றுக்கேற்ப இந்தத் திட்டத்தை சிறந்த முறையில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பள்ளியிலிருந்து நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரும் நோக்கோடு இந்தத் திட்டம் செவ்வனே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்று மகாகவி பாரதியார் பாடியுள்ளார். ஆயிரம் தர்மசத்திரங்களைக் கட்டுவதை விட ஏழை மாணவன் ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் மிகவும் புண்ணியத்துக்குரிய சிறந்த செயலாகும் என்று கூறியுள்ளார் பாரதி.

மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும் இல்லம் தேடிக் கல்வி!

அதைப் பின்பற்றி இந்தத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்தத் திட்டங்கள் பல்வேறு கல்வி உத்திகளை அரசுகள் புகுத்தி வருகின்றன. அப்படி 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் தொடங்கப்பட்டது தான் இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.

கரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவரிடம் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களை கொண்டு செயல்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

மாநிலத்தில் உள்ள 92 ஆயிரத்து 297 குடியிருப்புகளில் உள்ள சுமார் 34 லட்சம் மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தில் முறையான கல்வித் தகுதியுடன் பயிற்சி பெற்ற 2 லட்சம் தன்னார்வலர்கள் மாதம் ரூ.1,000 உதவித்தொகையுடன் செவ்வனே பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி திட்ட மையமானது, திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 8-ம் தேதி தொடங்கி வைத்தார்.

மாணவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள பொது இடத்தில் அல்லது தன்னார்வலர் இல்லத்தில் மாணவர்களை சேர்த்து 1:20 விகிதப்படி ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை இவர்களுக்கு கதை, ஆடல், பாடல், நாடகம், விளையாட்டு, பொம்மலாட்டம் ஆகியன செயல்பாடுகள் மூலம் கற்பித்தல் பணி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இதனால் கல்வி ஆர்வம் குறைந்த மாணவர்கள் கூட, இதில் இணைந்து நல்ல பயன் பெற்று வருகின்றனர். பள்ளிகளில் இருந்து நின்ற மாணவர்கள் கூட இந்தத் திட்டத்தால் மீண்டும் பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் என்ன...

இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று மாணவர்களுக்கு உடற்கல்வி வழங்குவதாகும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் தன்னார்வலர்களை அரசு நியமித்து வருகிறது. தன்னார்வலர்கள் மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வருகின்றனர். எனவே, அவர்கள் ஆன்லைன் கல்வி நம்ப வேண்டிய அவசியமில்லை. இந்த முயற்சியின் மாநிலத்தின் கல்வியறிவு விகிதத்தை அதிகரிக்க வழிவகை ஏற்படுகிறது.

அது ஒருபுறமிருக்க, இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது, கல்வி வழங்குவதில் உள்ள ஏற்றத்தாழ்வு சரி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாணவரும் கல்வி கற்க முடியும்.

திட்டத்தின் பயன்கள் மற்றும் சிறப்புகள்...

* இல்லம் தேடி கல்வி திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
* இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வியைப் பெறுவார்கள்.
* ஒவ்வொரு வகுப்பும் ஒரு தன்னார்வலரைப் பெற்றுள்ளது.
* இந்த தன்னார்வத் தொண்டர்கள், வீட்டுக்கு வீடு சென்று, பள்ளியில் சேர முடியாத மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.
* மேலும், இந்த திட்டம் போக்குவரத்து வசதி இல்லாத கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்.
* இந்த திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு மாத ஊதியம் ரூ.1,000 என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.12,000 வழங்கப்படுகிறது.
* தொற்றுநோய்களின் விளைவாக கற்றல் இழப்பு மற்றும் உளவியல் சிக்கல்களை அனுபவித்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தால் பலன் கிடைக்கும்.
* இந்தத் திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 86550 பேர் தன்னார்வலர்களாகப் பணிபுரிய பதிவு செய்துள்ளனர்.
* இதில் நகரத்தில் 86550 பேர் உள்ளனர். அவர்களில் 67,691 பேர் பெண்கள், 32 திருநங்கைகள், 18,557 ஆண்கள்.

திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிய தகுதி...

* தன்னார்வலர்கள் நிரந்தர தமிழ்நாட்டு மக்களாக இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
* ஏழாவது மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க, தன்னார்வலர்கள் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு தேவையான ஆவணங்களாக ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ், முகவரி சரிபார்ப்பு, பட்டப்படிப்பு சான்றிதழ்கள், பள்ளிச் சான்றிதழ்கள், செல்போன் எண், இ-மெயில் முகவரி ஆகியவை உள்ளன.

* வாரத்துக்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக பணிபுரியலாம்

* கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாடுவதற்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்
* தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதப் பாடங்களைக் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும்)

* யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக சிறப்பான முறையில் பங்கேற்க வேண்டும்
* குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்

தன்னார்வலராக சேர விண்ணப்பிப்பது எப்படி?

இந்தத் திட்டத்தில் தன்னார்வலராக சேர இல்லம் தேடி கல்வியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்குச் சென்று, தன்னார்வலராக பதிவு செய்யவேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்யவேண்டும். பின்னர் அவர்கள் கேட்கும் ஆவணங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர் சப்மிட் எனப்படும் பட்டனை கிளிக் செய்யும் நீங்கள் தன்னார்வலராக பதிவு செய்யப்படுவீர்கள். பின்னர் இல்லம் தேடி கல்வி திட்ட அதிகாரிகள் உங்களைத் தொடர்புகொண்டு தேவையான விவரங்களை உங்களிடமிருந்து பெறுவார்கள்.

இதன்மூலம் நீங்கள் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து மாணவர்களுக்கு கல்வி கற்கும் சிறப்புக்குரிய பணியைச் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Here is the salient features of Illam Thedi Kalvi Scheme. The Government of Tamil Nadu has launched Illam Thedi Kalvi Scheme. Through this scheme, education will be provided to the students in rural areas.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+