தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் விண்ணப்ப விற்பனை படுஜோர்...!!

Posted By:

சென்னை: தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. 2 நாளில் மட்டுமே சுமார் 12 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்களை கடந்த 2 நாள்களில் மொத்தம் 11,990 மாணவர்கள் பெற்றுச் சென்றுள்ளதாக மருத்துவக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் விண்ணப்ப விற்பனை படுஜோர்...!!

தமிழகத்தில் நடப்பாண்டில் மருத்துவ பொது நுழைவுத் தேர்வின்றி வழக்கம்போல் பிளஸ் 2 மதிப்பெண் மூலம் கணக்கிடப்படும் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். சேர்க்கை நடைபெறும் வகையிலான அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அண்மையில் ஒப்புதல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னை உள்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்ப விநியோகம் மே 26-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 6,123 பேர், 2-ம் நாளில் 5,867 பேர் என மொத்தம் 11,990 பேர் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

விண்ணப்பத்தைப் பெற ஜூன் 6-ஆம் தேதி கடைசி நாளாகும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அளிக்க ஜூன் 7-ஆம் தேதியும் கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் தமிழகத்தில் ஒரே விண்ணப்பம் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Sale of application forms for MBBS and BDS courses commenced in Tamilnadu. The last date for issue and download of application forms is June 6, and the last date for submission of the filled-in forms is June 7. Merit list will be declared on June 17 and the first phase of counselling will be held from June 20 to 25. The second phase of counselling will be held from July 18.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia