இந்திய விளையாட்டு ஆணையத்தில் சயின்டிபிக் அதிகாரி பணியிடம்!!

Posted By:

சென்னை: இந்திய விளையாட்டு ஆணையத்தில் (எஸ்ஏஐ) சயின்டிபிக் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 4-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் சயின்டிபிக் அதிகாரி பணியிடம்!!

மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. சயின்டிபிக் அதிகாரி பணியிடங்கள் 8-ம், ஜூனியர் சயின்டிபிக் அதிகாரி பணியிடங்கள் ஒன்றும் காலியாக உள்ளன.

சயின்டிபிக் அதிகாரி பணியிடத்துக்கு பட்டமேற்படிப்பு படித்திருக்கவேண்டும். 7 ஆண்டு அனுபவமும் இருக்கவேண்டும்.

வயது 56-க்கு மிகாமல் இருக்கவேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு தகுந்த ஆவணங்களுடன் the Director (Personnel) Sports Authority of India Jawaharlal Nehru Stadium (East Gate) 2nd Floor, Lodhi Road, New Delhi என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை மார்ச் 4-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.

இந்திய விளையாட்டு ஆணையம் என்ற அமைப்பானது 1984-ல் மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதாகும். எஸ்ஏஐ அமைப்புக்கு பெங்களூரு, காந்திநகர், சண்டீகர், கொல்கத்தா, இம்பால், கௌஹாத்தி, போபால், லக்னோ, சோனேபட் ஆகிய நகரங்களில் மையங்கள் உள்ளன.

கல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு http://www.sportsauthorityofindia.nic.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Sports Authority of India (SAI) invited application from eligible candidate for 09 Scientific Officer and Junior Scientific Officer posts. Interested and eligible candidates can send their application in the prescribed format on or before 04 March 2016. How to apply? Interested and eligible candidates can send their application in the prescribed format along with required copies of documents to the Director (Personnel) Sports Authority of India Jawaharlal Nehru Stadium (East Gate) 2nd Floor, Lodhi Road, New Delhi on or before 04 March 2016. Important Date: Last date of application: 04 March 2016.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia