போலி சான்றிதழ்களை பயன்படுத்தி அரசு வேலைப் பார்க்கும் 1800 பேர் பணி நீக்கம்... மத்திய அரசு அறிவிப்பு

1800க்கும் மேற்ப்பட்டவர்கள் போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசுவேலையில் சேர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை : மத்திய அரசு 1800க்கும் அதிகமானவர்கள் போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு வேலையில் உள்ளார்கள் என தெரிவித்துள்ளது. போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசு வேலையில் உள்ளவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்படும் அனைத்து துறைகளிலும் வேலை செய்யும் ஊழியர்களின் சான்றிதழ்கள் பற்றிய தகவல்களை அந்தந்த நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு சேகரித்தது. அதில் 1800க்கும் மேற்பட்டவர்கள் போலிச் சான்றிதழ் மூலம் வேலை பார்ப்பது தெரிய வந்துள்ளது.

1,800 க்கும் அதிகமானவர்கள் பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற நிதி துறைகளில் போலி ஜாதிச் சான்றிதழ்கள் மூலம் வேலை செய்வதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலிச் சான்றிதழ் பயன்படுத்தியவர்கள் பணி நீக்கம்

போலிச் சான்றிதழ் பயன்படுத்தியவர்கள் பணி நீக்கம்

தற்போதுள்ள விதிமுறைகளின் படி, ஒரு அரசாங்க ஊழியர் தவறான தகவல்களை வழங்கியிருந்தால் அல்லது நியமனம் பெறுவதற்கு தவறான சான்றிதழை வழங்கியிருந்தால் அவரை வேலையில் இருந்து நிறுத்தி விட வேண்டும். ஒரு ஊழியர் தவறான அல்லது போலி சாதி சான்றிதழை சமர்ப்பித்திருப்பது தெரிய வந்தால் அப்படிப்பட்ட ஊழியரை சேவை விதிமுறைகளின் படி சேவையில் இருந்து நீக்கவோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

 மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு உத்தரவு

போலி அல்லது தவறான சாதி சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்ட நியமனங்கள் பற்றிய தகவல்களை அனைத்துத் துறைகளிலிருந்தும் சேகரிக்கவும், அதன்பின் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட காலியிடங்களுக்கு எதிராக பணி நியமனம் பெற்றிருப்பவர்கள், மற்றும் போலிச்சான்றிதலுக்காக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்ட வழக்குகள் பற்றிய அனைத்து தகவல்களை ஒருங்கிணைத்து அனுப்புமாறு அந்தந்த நிர்வாகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 போலிச்சான்றிதழ் வழக்குகள்

போலிச்சான்றிதழ் வழக்குகள்

அரசு பணியாற்றும் அதிகாரி ஒருவர் மார்ச் 29 ம் தேதி மக்களவைக்கு எழுதியுள்ள கடிதத்தில் போலி ஜாதிச் சான்றிதழ்கள் அடிப்படையில் 1,832 பேருக்கு பணி நியமனங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் 276 பேர் தற்காலிக இடைநீக்கம் அல்லது நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 521 பேருடைய வழக்குகள் தீர்ப்பில் சிக்கியுள்ளன. மீதமுள்ள 1,035 வழக்குகளில் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிவித்துள்ளார்.

போலிச்சான்றிதழ் பயன்படுத்திய ஊழியர்கள் எண்ணிக்கை

போலிச்சான்றிதழ் பயன்படுத்திய ஊழியர்கள் எண்ணிக்கை

போலி சாதிச் சான்றிதழ்கள் மூலம் 1,296 வேலைகள் சேதமடைந்தன. இந்திய மத்திய வங்கியில் 135 பேர், இந்திய வெளிநாட்டு வங்கியில் 112 பேர், சிண்டிகேட் வங்கியில் 103 பேர், மற்றும் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒவ்வொன்றிலும் 41 பேர் என போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி வேலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

போலியான தகவல்களை வழங்கி அரசு வேலையில் உள்ளவர்களை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்களுக்கு வேறு எந்த அரசாங்க வேலையும் வழங்கப்படக் கூடாது என்பதுதான் சரியான தீர்ப்பாகும்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The move assumes significance as over 1800 appointments, a majority of them in financial sectors were allegedly secured through fake certificates.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X