ரஷ்ய கல்விக் கண்காட்சி- சென்னையில் நாளை துவக்கம்!

Posted By:

சென்னை: ரஷ்ய கலாச்சார மையம் சார்பில் நடைபெறும் ரஷ்ய கல்விக் கண்காட்சியின் துவக்க விழா சென்னையில் நாளை நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தின் தலைவரான, ரஷ்ய துணை தூதர் மிக்கேல் கோர்படோவ், "ரஷ்யாவில் 650 அரசு பொறியியல் பல்கலைக்கழகங்களும், 63 அரசு மருத்துவக் பல்கலைக்கழகங்களும் உள்ளன.

ரஷ்ய கல்விக் கண்காட்சி- சென்னையில் நாளை துவக்கம்!

இவற்றில் ரஷ்ய மொழியில் படிக்க ஆண்டுக்கு ரூபாய் 2 லட்சத்து 56 ஆயிரமும், ஆங்கில மொழியில் படிக்க ரூபாய் 3 லட்சத்து 84 ஆயிரமும் செலவாகும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது ரஷ்ய பல்கலைக்கழகங்களில் கல்விக் கட்டணம் குறைவு.

இந்த பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்புகள், கல்விக் கட்டணம், சேர்க்கை நடைமுறைகள் பற்றி விளக்குவதற்காக ஸ்டடி அப்ராட் என்ற அமைப்புடன் சேர்ந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் ரஷ்ய கல்வி கண்காட்சியை நடத்துகிறோம்.

இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். ஜூன் 9 ஆம் தேதி மதுரையில் உள்ள ஹோட்டல் மதுரை ரெசிடென்சியில் இக்கண்காட்சி நடைபெற உள்ளது. அனுமதி இலவசம்" என்று தெரிவித்தார்.

English summary
As a part of the second intake by Russian universities, the Consulate General of the Russian Federation in Chennai and Study Abroad are organising a two-day education fair at the Russian Cultural Centre between 10 a.m. and 5 a.m. on June 6 and 7.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia