கோவா கல்லூரிகளுக்கு ரூ.7.49 கோடி! மத்திய அரசு வழங்கியது!!

Posted By:

சென்னை: கோவாவிலுள்ள கல்லூரிகளுக்கு ரூ.7.49 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் ராஷ்டிரிய உச்சட்டர் ஷிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் கோவா மாநிலத்திலுள்ள கல்லூரிகளின் வளர்ச்சிக்காக இந்தத் தொகை வழங்கப்பட்டது. மத்திய அரசு வழங்கிய இந்தத் தொகையை மாநில அரசு சமீபத்தில் வழங்கியது.

கோவா கல்லூரிகளுக்கு ரூ.7.49 கோடி! மத்திய அரசு வழங்கியது!!

இதில் 40 சதவீதத் தொகை கோவா மாநில அரசு செலுத்தியுள்ளது. இதன்மூலம் மாநிலத்திலுள்ள கல்லூரிகளில் கூடுதல் வசதிகள் உருவாக்கப்படும் என்று கோவா முதல்வர் லஷ்மிகாந்த் பர்சேகர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: கோவா மாநிலத்தில் கடும் நிதிப்பற்றாக்குறை உள்ளது. இருந்தபோதும் மத்திய அரசு வழங்கிய நிதியுடன் சேர்த்து கோவா மாநில அரசும் நிதி வழங்கியுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு 90 சதவீத மானியத்தை கோவா மாநில அரசு மட்டுமே வழங்கி வருகிறது என்றார் அவர்.

English summary
Goa government today distributed more than Rs 7.49 crore in grants under the Union Government's Rashtriya Uchchatar Shiksha Abhiyan to various colleges in the state, including the Goa University. The state's contribution is 40 per cent while the remaining money comes from the Centre. "Despite a financial crisis, the government agreed to contribute for this scheme. The state government had earmarked Rs 16 crore for this scheme in 2015-16 budget," Chief Minister Laxmikant Parsekar said, speaking at Porvorim after distributing the funds. Of the grants disbursed today, Rs 4.5 crore came from the Centre and Rs 2.99 crore from the state coffers, he said.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia