புதுடெல்லி: ரயில்வே ரெக்ரூட்மெண்ட் போர்ட் (ஆர்ஆர்பி) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தயாராகிவிட்டது. அவர்கள் சம்பந்தப்பட்ட இணையதளத்துக்குச் சென்று ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
ஜம்முவில் உள்ள காலி ரயில்வே பணியிடங்களுக்கு ஆர்ஆர்பி தேர்வை நடத்தவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆர்ஆர்பி தேர்வு செய்து ஹால் டிக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன. மொத்தம் 18,252 பணியிடங்களுக்கான தேர்வாகும் இது. இந்தத் தேர்வுகள் மார்ச் முதல் மே வரை ஜம்மு பகுதியில் நடைபெறவுள்ளன.

ஹால் டிக்கெட்டுகளைப் பெறுவதற்காக http://www.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
இணையதளத்துக்குச் சென்ற பிறகு 'NTPC Non-Technical Admit Card 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் தேர்வு பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றைக் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்.
இந்தத் தேர்வானது 90 நிமிடங்கள் நடைபெறும். 100 கேள்விகள் கேட்கப்படும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.


Click it and Unblock the Notifications

