49 வயதில் ஐஐடி-யில் பட்டமேற்படிப்பு...! கலக்கும் சென்னை பெண்!!

கௌஹாத்தி: 49 வயதில் ஐஐடி-யில் பட்டமேற்படிப்பில் சேர்ந்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த பெண் பத்மா சுந்தரி.

மெட்ராஸ் ஐஐடியில் இண்டஸ்டிரியல் மேத்தமேட்டிக்ஸ் அண்ட் சயின்டிபிக் கம்ப்யூட்டிங் பிரிவில் பட்டமேற்படிப்பில் சேர்ந்து படித்து வருகிறார் பத்மா சுந்தரி.

49 வயதில் ஐஐடி-யில் பட்டமேற்படிப்பு...! கலக்கும் சென்னை பெண்!!

படிப்பு குறித்து பத்மா சுந்தரி கூறியதாவது: நான் இதற்கு முன் பட்டப்படிப்பு முடித்து ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து வந்தேன். பின்னர் 4 வருடங்களுக்கு வேலையை விட்டு விட்டு கேட் தேர்வு எழுதினேன்.

இந்த விஷயத்தில் எனக்கு என் கணவர் மிகவும் உதவிகரமாக இருக்கிறார். தற்போது ஹாஸ்டலில் தங்கிப் படித்து வருகிறேன். என்னுடைய வருகைக்காக எனது கணவர் காத்திருப்பார்.

முதலில் பட்டமேற்படிப்பு சேரும்போது இங்கு ஒருவித தயக்கம் இருந்தது. பின்னர் அது சரியாகிவிட்டது. இங்குள்ள சக மாணவிகள், மாணவர்கள் என்னை ஒரு தாய் போல பார்க்கின்றனர். இங்குள்ள மாணவிகள், தங்களது பெற்றோருடன் கருத்து வேறுபாடு ஏற்பும்போது என்னிடம் அவர்கள் பிரச்னைகளைச் சொல்கின்றனர். நான் அவர்களுக்கு உதவ முடிகிறது. என்னை ஒரு தாயாகவும், தோழியாகவும், நண்பியாகவும் பார்க்கின்றனர். அவர்களுக்கு என்னாலான ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

அவர்கள் பிரச்னைகளிலிருந்து மீண்டு வர வழி சொல்கிறேன். இந்த பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு அடுத்த வேறு ஒரு படிப்பைத் தொடரவேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம் என்றார் இந்த மூத்த மாணவி பத்மா சுந்தரி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Can you imagine a lady who is the same age as your mom studying with you in college? She could double-up as the counsellor as you approach her with your problems and regale you with stories of her adventures. Students of a particular batch at IIT-Madras do have such a special classmate.It’s never too late to do anything, they say, and 49-year-old Padma Sundari, who’s doing her Masters in Industrial Mathematics and Scientific Computing at IIT-Madras in a class of twenty somethings, will tell you the same. Padma now gets to pursue Mathematics, which she always wanted to study further, gets to stay at a hostel, and gets to have an entirely different generation of students as her classmates, for whom she also acts as the agony aunt.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X