சென்னை: ரயில் நில அபிவிருந்தி ஆணையத்தில்(ஆர்எல்டிஏ) கிளார்க் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காத்திருக்கின்றன.
தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் அடுத்த 30 நாள்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
ரயில் நில அபிவிருத்தி ஆணையமானது மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பயன்படுத்தப்படாத நிலங்களை மேம்படுத்துவதுதான் இந்தஆணையத்தின் வேலை.

தற்போது ஆர்எல்டிஏ-வில் கிளார்க், செயலாளர், மேலாளர், சட்ட ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன.
தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பங்களை the Joint General Manager (HRD), Rail Land Development Authority, Near Safdarjung Railway Station, Moti Bagh-I, New Delhi-110021 என்ற முகவரிக்கு அடுத்த 30 நாள்களுக்குள் அனுப்பவேண்டும்.
வயதுச் சலுகை, கல்வித் தகுதி, சம்பளம் போன்ற விவரங்களுக்கு www.rlda.in என்ற இணையதளத்தை அணுகவும்.
இதுதொடர்பான விளம்பரத்தை எம்ப்ளாய்மெண்ட் நியூஸ்பேப்பரிலும் காணலாம்.


Click it and Unblock the Notifications

