இந்திய தேசிய ராணுவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு..!!

இந்திய தேசிய ராணுவக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூன் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு பொதுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு https://rimc.gov.in/rimcindex.aspx என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

இந்திய தேசிய ராணுவக் கல்லூரி என்று அழைக்க்படும் ராஷ்டிரிய இந்திய ராணுவக் கல்லூரி (Rashtriya Indian Military College -RIMC)[இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனினல் செயல்பட்டு வருகிறது. இது மாணவர்களுக்கான ராணுவப் பயிற்சிப் பள்ளி ஆகும். இது பிரிட்டிஷ் இந்திய அரசால் நிறுவப்பட்ட மிகச் சிறந்த ராணுவக் கல்லூரி ஆகும்.

1922-ல் இந்த ராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இதனை தற்போது மத்திய அரசு நடத்துகிறது. 138 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கல்லூரியில் சேர 11.5 வயது நிறைவடைந்த மாணவர்கள், ஆண்டுதோறும் இருமுறை, நுழைவுத் தேர்வு மூலம் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்திய தேசிய ராணுவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பு..!!

இக்கல்லூரியில் 8 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை வழக்கமான அறிவியல் பாடங்களுடன், அடிப்படை ராணுவப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இக்கல்லூரியில் 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் உள்ளனர். இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களாக ஜெனரல் கே. எஸ். திம்மையா மற்றும் அக்சர் கான் போன்றவர்கள் உள்ளனர்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை 25 மாணவர்களை மட்டும் எட்டாம் வகுப்பிற்கு, அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். வகுப்பு துவங்கும் போது மாணவர்களின் வயது 11.5 முதல் 13-க்குள் இருத்தல் வேண்டும் என்பது விதியாகும்.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உத்தராகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி (இந்திய தேசிய ராணுவக் கல்லூரி) அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் 8-ம் வகுப்பு முதல் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்நிலையில் இந்தக் கல்லூரியின் 2025 ஜனவரி பருவ சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, ஜூன் 1-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக, அத் தேர்வு ஜூன் 8-ம் தேதிக்குதள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Public Service Commission (TNPSC) on Monday informed that it has postponed the qualifying examination for admission to Rashtriya Indian Military college in Dehradun, following the Model Code of Conduct of the ongoing Lok Sabha elections. According to the Commission, "Qualifying examination for admission to Rashtriya Indian Military College, Dehradun, January 2025 Term which is scheduled to be held on June 1, 2024 has been postponed to June 8, 2024 due to Lok Sabha Elections."
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+