ஆர்ஜிஐபிடி இன்ஸ்டிடியூட்டில் எம்.டெக் படிக்க விருப்பமா....!!

Posted By:

டெல்லி: ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பெட்ரோலியம் டெக்னாலஜியில்(ஆர்ஜிஐபிடி) எம்.டெக் படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலியில் இந்த இன்ஸ்டிடியூட் அமைந்துள்ளது. பெட்ரோலியம் என்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் எம்.டெக் படிக்கலா.ம் 2016-ல் இந்த படிப்புக்கான சேர்க்கை தொடங்கும். 2 ஆண்டு படிப்பாகும் இது.

ஆர்ஜிஐபிடி இன்ஸ்டிடியூட்டில் எம்.டெக் படிக்க விருப்பமா....!!

எம்.டெக் படிக்க பி.டெக் அல்லது பி.இ. படித்து முடித்திருக்கவேண்டும். பெட்ரோலி, பெட்ரோகெமிக்கல், புரொடக்ஷன், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், இன்டஸ்டிரியல், மேனபேக்ச்சரிங் என்ஜினீயரிங் உள்ளிட்ட ஏதாவது ஒரு பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

மேலும் கேட் தேர்விலும் வெற்றி பெற்றிருக்கவேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பவேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200 செலுத்தினால் போதுமானது.

கூடுதல் விவரங்களுக்கு http://www.rgipt.ac.in/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.

படிப்புக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, கேட் மதிப்பெண், தேர்வு மதிப்பெண்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பங்களை ஜூன் 30-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்,.

English summary
Applications have been invited by Rajiv Gandhi Institute of Petroleum Technology (RGIPT), Rae Bareli for admission into 2 years full time Master of Technology (M.Tech) programme. Admissions are offered in the Petroleum Engineering and Chemical Engineering for the academic session 2016. Eligibility Criteria: M.Tech in Petroleum Engineering Programme: Candidates should have completed 4-year B.Tech./B.E. degree in Petroleum, Petrochemical, Production, Chemical, Electrical, Mechanical, Industrial and Manufacturing Engineering or Civil Engineering with a first class or minimum 60% marks or 6.0 CPI (55% marks or 5.5 CPI for SC/ST students) in the qualifying exam and a qualified GATE score.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia