ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் மேலாளர் பணி .. வேகமாக விண்ணப்பியுங்கள்!

Posted By:

சென்னை : ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16 மார்ச் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் ஆப்ஜக்டிவ் டைப் மற்றும் டிஸ்கிரிப்டிவ் டைப் என இரண்டு பகுதிகள் காணப்படும். இரண்டுப் பகுதி தேர்வும் ஒரே நாளில் நடத்தப்படும். தனித் தனி செஸனாக நடத்தப்படும. டிஸ்கிரிப்டிவ் தேர்வு பகுதி ஆன்லைன் அல்லது ஆப்லைனில் நடத்தப்படும்.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் மேலாளர் பணி .. வேகமாக விண்ணப்பியுங்கள்!

காலிப் பணியிடங்களின் விபரங்கள் -

மேலாளர் - (டெக்னிக்கல் சிவில்) கிரேடு பி - 2 காலியிடங்கள்

உதவி மேலாளர் - (ஆட்சி மொழி) கிரேடு ஏ - 10 காலியிடங்கள்

உதவி மேலாளர் - (செக்யூரிட்டி) கிரேடு ஏ - 07 காலியிடங்கள்

கல்வித் தகுதி -

மேலாளர் பணிக்கு - சிவில் எஞ்ஜினியரிங் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும் அல்லது அதற்கு இணையான தகுதியினைப் பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் 60% மார்க்குகளைப் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.

உதவி மேலாளர் பணிக்கு - முதுகலைப் பட்டப்படிப்பில் (இரண்டாம் வகுப்பு) தேர்சிசி பெற்றவர்கள் மற்றும் முதுகலை ஆங்கிலம் அல்லது ஹிந்தி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஹிந்தி மொழிப்பெயர்ப்பு தெரிந்த முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு - 08.11.1988 ஆம் தேதிக்கு பின் பிறந்தவர்களும், 07.11.1996 ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். அதாவது 20வயதிற்கு மேற்பட்டவர்களும் 28 வயதிற்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு - 5 வருடம்

ஒபிசி பிரிவினருக்கு - 3 வருடம்

மாற்றுத்திறனாளி ஜெனரல் - 10 வருடம், ஓபிசி - 13 வருடம், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 15 வருடமும் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம் -

ஜெனரல் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு rs. 600/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு rs. 100/- விண்ணப்பக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

முக்கிய தேதிகள் -

மார்ச் 1ம் தேதியிலிருந்து மார்ச் 16ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் பிரிண்ட் அவுட் எடுப்பதற்கான கடைசி தேதி - 22 மார்ச் 2017

மேலும் விபரங்களுக்கு www.rbi.org.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Reserve Bank of India (RBI) has begun the application process for recruitment of Manager (Technical - Civil), Assistant Manager (Rajbhasha), and Assistant Manager (Security).

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia