மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் புதிய அதிநவீன ஆராய்ச்சிக் கூட்டம்!!

Posted By:

சென்னை: லிகோ - இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் புதியதோர் அதிநவீன ஆராய்ச்சிக் கூட்டம் அமைக்கப்படவுள்ளது.

ஐஐடி மெட்ராஸுக்குச் சொந்தமான மற்றொரு வளாகம் வண்டலூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில்தான் இந்த புதிய அதிநவீன ஆய்வுக் கூட்டம் அமையவுள்ளது.

மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் புதிய அதிநவீன ஆராய்ச்சிக் கூட்டம்!!

ஐஐடி-எம் பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உதவியுடன் இந்த அதிநவீன ஆராய்ச்சிக் கூடம் அமையவுள்ளது. இந்து 2023-ல் செயல்படத் தொடங்கும் என்று தெரியவந்துள்ளது.

தி லேசர் இன்டர்பெரோமீட்டர் கிராவிடேஷன்-வேவ் ஆப்சர்வேட்டரி இன் இந்தியா (லிகோ-இந்தியா திட்டம்) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை பிப்ரவரி 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்தே இந்த அதிநவீன ஆய்வுக் கூடம் அமைக்கும் பணியைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐஐடி-எம் பேராசிரியர் அனில் பிரபாகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த அதிநவீன ஆய்வுக் கூடம், ஆராய்ச்சி மாணவர்களும், பேராசிரியர்களும் மிகவும் உபயோகமாக இருக்கும் என்றார் அவர்.

English summary
As a part of the LIGO-India project announced recently, a research lab is scheduled to be setup at the new IIT Madras Research Campus at Vandalur.A research team comprising of senior IIT-M professors and research students would construct a third-generation gravitational wave detector for the larger optical experiment setup, which is expected to begin operations by 2023. The Laser Interferometer Gravitation-wave Observatory in India (LIGO-India project) cleared by the Union Cabinet on February 17 is being overseen by the IndiGO (Indian Initiative in Gravitational-wave Observations) consortium of which IIT-M is a member.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia