இந்திய குடியரசு தினம் பற்றி கட்டாயம் நாம் அறிந்திருக்க வேண்டிய விசயங்கள்!!

இன்றைய தினத்தில் நாம் குடியரசு தினம் குறித்து கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சில விசயங்களை இங்கே பார்க்கலாம் வாங்க.

இந்தியாவில் கடந்த 1950-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினம் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, வரும் 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தலைநகரமான தில்லியில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்திய குடியரசு தினம் பற்றி கட்டாயம் நாம் அறிந்திருக்க வேண்டிய விசயங்கள்!!

தில்லி மட்டுமின்றி ஒவ்வொரு மாநிலத்திலும் குடியரசு தின விழாவையொட்டி, முப்படைகளின் அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினத்தில் நாம் குடியரசு தினம் குறித்து கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சில விசயங்களை இங்கே பார்க்கலாம் வாங்க.

குடியரசு தினம்

குடியரசு தினம்

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட நாளே குடியரசு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 1950 ஜனவரி 24ம் தேதி 308 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட அரசியலமைப்பு கையெழுத்திடப்பட்டது செயல்பாட்டிற்கு வந்தது.

குடியரசு தினம் எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?

குடியரசு தினம் எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?

ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு மகாத்மா காந்தி ஏற்படுத்திய விடுதலை நாளான ஜனவரி 26ம் தேதி, மக்களின் ஆட்சி ஏற்பட்டது என, அன்றைய தினத்தை கொண்டாட, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. அதன்படி 1950ம் ஆண்டு முதல் இந்திய குடியரசு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எப்படி கொண்டாடப்படுகிறது?

எப்படி கொண்டாடப்படுகிறது?

குடியரசு தினத்தன்று இந்திய தலைநகர் தில்லியில் குடியரசுத் தலைவர் தலைமையில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு இந்திய முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, சிறந்த இராணுவ வீரர்களுக்குக் குடியரசுத் தலைவர் பதக்கங்களை வழங்கி கவுரவிப்பார்.

மாநிலங்களில் குடியரசு விழா

மாநிலங்களில் குடியரசு விழா

அதே போன்று, ஒவ்வொரு மாநிலங்களிலும், அந்ததந்த மாநில ஆளுநர் கொடியேற்றி, காவலர்களின் அணிவகுப்பு நடைபெறும். தொடர்ந்து, மாநிலத்தில் சிறந்து செயல்பட்டு பாதுகாப்பு விரர்கள், காவலர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்படும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Republic Day India 2022: Things we must know about Indian Republic Day!!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X