புதிய திட்டத்துடன் அதிரடியாக இறங்கும் ஜியோ!

Posted By: Kani

நம் உலகம் வேகமாக மாறி வருகிறது, நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்கள் 'டிஜிட்டல்' யுகத்திற்கு மாறிவருகின்றன. இரவில் தூங்கி காலையில் விழிக்கும் போது புதிய தொழிட்நுட்பத்துடன் பயணப்படுகிறோம்.

இந்த சூழ்நிலையில், தற்போதைய தலைமுறை மாணவர்களின் திறமையை ஊக்குவிப்பதும், எதிர்கால சவால்களுக்கு தன்னை தயார்படுத்துவதும் மிக அவசியம்.

புதிய திட்டத்துடன் அதிரடியாக இறங்கும் ஜியோ!

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜியோ நிறுவனம் டிஜிட்டல் சாம்பியன்ஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், அதன் புரிதலையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

5 வார காலப் பயிற்சி வகுப்புகள் உள்ளடக்கிய இத்திட்டத்தின் முதல் வகுப்பு, வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது.

பல்வேறு பிரிவுகளாக பிரித்து இந்த பயிற்சி வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இது பற்றிய கூடுதல் விபரங்கள் மற்றும் பயிற்சியில் கலந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.

English summary
Reliance Jio announces 'Digital Champions' student learning programme

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia