பட்டதாரி இளைஞர்களுக்கு ரிலையன்ஸ் குளோபல் கார்ப்பரேட் செக்யூரிட்டி எக்ஸிகியூட்டிவ் வேலை

Posted By:

சென்னை : ரிலையன்ஸ் குளோபல் கார்ப்பரேட் செக்யூரிட்டி எக்ஸிகியூட்டிவ் வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி இளைஞர்களுக்கு ரிலையன்ஸ் குளோபல் கார்ப்பரேட் செக்யூரிட்டி எக்ஸிகியூட்டிவ் வேலை

வேலை - செக்யூரிட்டி எக்ஸிகியூட்டிவ் (டிரைய்னி)

தகுதி - பட்டப்படிப்பு

எக்ஸ்பிரியன்ஸ் - பிரசர்ஸ்

சம்பளம் - ஒரு வருடம் ஆரம்ப பயிற்சி காலத்தில், வருடத்திற்கு 3.75 லட்சம். அதன் பின்னர் ரூ. 4.5 லட்சம் வருடத்திற்கு, மற்றும் பணியாளர் பலன்களும் வழங்கப்படும்.

வேலைஇடம் - இந்தியா முழுவதும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 28 ஏப்ரல் 2017

தேவையான தகுதிகள்

முன்அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தியக் குடிஉரிமைப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 65% மார்க்குகள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு -

20 வயது முதல் 25 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆண்கள் 157.5 செ.மீ உடையவராக இருத்தல் அவசியமாகும். பெண்களுக்கு 152 செ.மீ உடையவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

மெண்டல் எபிலிட்டி தேர்வு வைத்து விண்ணப்பதாரர்கள் நியமிக்கப்படுவார்கள், மெண்டல் எபிலிட்டி தேர்வில் ரீசனிங் திறன், அளவு திறனறி, பொது அறிவு, அடிப்படை கணினி அறிவு. ஆங்கிலம் புரிதல் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விள் கேட்கப்படும். மேலும் குரூப் டிஸ்கசன், சைகோமெட்ரிக் தேர்வு மற்றும் பெர்ஸ்சனல் இன்டர்வியூ மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

பி.இ.டி

ஆண்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள்

800 மீட்டர் (3.2 நிமிடங்களில்) ரன், நீண்ட குதிப்பு (9 அடி), ஹை ஜம்ப் (3 அடி), அமர்ந்து அப்ஸ் (10), தள்ளு அப்ஸ் (10) ஆகியவை ஆண்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் ஆகும்

பெண்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள்

800 மீட்டர் (4 நிமிடங்களில்) ரன், நீண்ட குதிப்பு (8 அடி), ஹை ஜம்ப் (2.4 அடி), அமர்ந்து அப்ஸ் (8), தள்ளு அப்ஸ் (8)
ஆகியவை பெண்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் ஆகும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு www.rgsscareers.ril.com என்ற இணையதள முகவரியை அனுகவும்.

English summary
Reliance Recruitment 2017-Reliance Global Corporate Security hiring Freshers graduates as Security Executive (Trainee).
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia