இடைநிலை ஆசிரியர்களுக்கு.... ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..!

Posted By:

சென்னை : உயர் கல்வி தகுதி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1997ம் ஆண்டு முதல் 2000ம் அண்டு முடிய ஏற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப போதிய பணி நாடுனர்கள் கிடைக்க வில்லை.

இடைநிலை ஆசிரியர்களுக்கு.... ஊக்க ஊதிய உயர்வு பெற அரசாணை வெளியீடு..!

எனவே வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் அதே வகுப்பைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் கல்வித்தகுதி பெற்றவர்களை கொண்டு இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் உயர்கல்வித் தகுதி பெற்றுள்ளதால் அவர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப போதிய பணி நாடுனர்கள் கிடைக்க வில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் அநேகர் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். மருத்துவப் பணி மற்றும் ஆசிரியர்ப் பணி போன்ற பணிகள் மகத்தான மக்கள் சேவை பணிகள்.

நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் கிராமங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று பணியாற்ற முன்வர வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் முதுகெழும்பான கிராமங்களும் வளர்ச்சி அடையும்.

English summary
The director of the school department said that the government has issued a proposal to increase stimulus pay for intermediate teachers.
Please Wait while comments are loading...