கல்வியில் சாதனை புரியும் சமந்தா... இது ஒடிஸா சமந்தா!

சென்னை: சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி ஒருவர் நடத்தி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா...

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையால் அந்த பல்கலைக்கழகம் ஏ கிரேடு அந்தஸ்தைப் பெற்றுள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு மழலையர் வகுப்பு முதல் முதுபட்டமேல்படிப்பு வரை இலவசமாக வழங்கப்படுகிறது என்றால் அதிசயப்படும் இருக்கிறதல்லவா.....

கலிங்கா இன்ஸ்டிடியூட்

இதை அனைத்தையும் செய்பவர் டாக்டர் சமந்தா அச்சுதா. ஒடிஸா மாநிலம்புவனேஸ்வரில் கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் அண்ட் டெக்னலாஜி(கேஐஐடி) பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்து அங்கு கல்வியில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார் அவர். இவர்தான் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பழங்குடியின மாணவ, மாணவிகளின் விடிவெள்ளியாக உள்ளார்.

உயர்கல்வி படிப்புகள்

இன்று கேஐஐடி பல்கலைக்கழகத்தின் அனைத்து வகையான உயர்கல்வி படிப்புகள், மருத்துவம், பல் மருத்துவம், ஐடி போன்ற உயர்கல்வி என அனைத்தையும் வழங்கி வருகிறது. கலை, அறிவியல் படிப்பு முதல் மரதத்துவம், பல்மருத்துவம், ஐடி, பிடி என அனைத்து தரப்பு படிப்புகளையும் அளித்து வருகிறார்.

ஏழை மாணவர்

ஒடிஸா மாநிலம் கட்டாக் மாநிலத்தில் சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சமந்தா. அவர் 4 வயதாக இருக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். ஆனாலும் தாய்க்கு உதவியாக பண்ணையில் கூலி வேலை செய்தும், தங்களுக்குரிய சிறிய நிலத்தில் வேலை செய்தும் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் பட்டமேல்படிப்பும் படித்தார்.

கற்பக விருட்சம்

அதன் பிறகு சிறிய அளவில் ஒரு இன்ஸ்டிடியூட்டைத் தொடங்கினார். அதற்கு கலிங்கா இன்ஸ்டிடியூட் என்று பெயரிட்டார். அதை படிப்படியாக முன்னேற்றி இன்று ஆலமரமாக அதை வளர்த்துள்ளார்.
அது இன்று ஒரு கற்பக விருட்சம் போல ஏழை மாணவர்களுக்கு கேட்ட படிப்புகளை அள்ளித் தருவதாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒடிஸா மாநிலம் பழங்குடி மக்கள் அதிக அளவில் வசிக்கும் மாநிலம். இஙங்கு ள்ள மக்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். அவர்களது ஏழ்மையை விரட்ட ஒரே ஒரு வழி கல்விதான் என்பதை உணர்ந்தவர் சமந்தா.

பழங்குடியின மக்கள்

அதற்காக அவர்களுக்காக ஒரு இன்ஸ்டிடியூட்டைத் தொடங்கினார். அவர்கள் மலழலையர் படிப்பு முதல் பட்டமேல்படிப்பு வரை பயில தொடங்கப்பட்ட இன்ஸ்டிடியூட்தான் அது. இங்கு கல்வி, உணவு, உடை, தங்க இடம் அனைத்தும் இலவசம். இங்கு மாணவ, மாணவிகள் சேர்த்துவிட்டால் மட்டுமே போதும். அவர்கள் படித்து பட்டதாரியாக்கி அவர்களை வெளியே கொண்டு வருவதுதான் இவர்களுக்கு டாக்டர் அச்சுதா சமந்தாவின் வேலை.
தற்போது கலிங்கா பல்கலைக்கழகத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட பழங்குடியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மருத்துவ, பல் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியைப் பயின்று வருகிறார்கள்.

5 ஆயிரம் மாணவர்கள்

5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்குடி மாணவர்கள் பள்ளிப் படிப்பை பயின்று வருகின்றனர்.ஒட்டுமொத்தமாக கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இண்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி (கேஐஐடி) ஏ கிரேடு அந்தஸ்தை மத்திய அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வழங்கியுள்ளது.

சர்வதேச தரக் கல்வி

ஒடிஸா தலைநகரான புவனேஸ்வரில் 400 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது இந்த கேஐஐடி. இதற்கு 22 கல்வி வளாகங்கள் உள்ளன. அனைத்து கட்டகட்டடங்கள் நவீன தரத்தில் கட்டப்பட்டவை. வெளிநாடுகளில் இருப்பது போன் கல்வி நிறுவனங்களை ஒத்தவை. சர்வதேச தரத்தில் இங்கு கல்வி போதிக்கப்படுகிறது.

டெல்லியிலும்...

இப்போது டெல்லியிலும் கேஐஐடி கிளையைத் தொடங்கியுள்ளார் டாக்டர் சமந்தா. 50 வயதாகும் டாக்டர் சமந்தாவின் உயரிய நோக்கம் எதுவென்றால், தங்களது மாநிலத்தில் ஏழை மக்கள் யாரும் படிக்காமல் இருக்கக்கூடாது. அப்படி யாராவது இருப்பது தெரிந்தால் அவருக்கு உடனே தனது கல்வி நிறுவனத்தில் இணைத்து அவர்களுக்கு கல்வி வழங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு. அதை நோக்கி பயணிக்கவேண்டும் என்பதுதான் அவரது தாரக மந்திரம்.

லிம்கா புத்தகச் சாதனை

இந்தியாவில் இளம் வயதில் ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக பதவியேற்றவர் என்ற லிம்கா புத்தகச் சாதனையைப் புரிந்துள்ளார். இதுதவிர நூற்றுக்கணக்கான விருதுகள், பட்டங்களை வென்று சாதனை செய்துள்ளார். தொடரட்டும் இவரது கல்விச் சேவை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  English summary
  Achyutananda Samanta is a social entrepreneur and philanthropist of Art of Giving in the Indian state of Odisha. He is the founder of KIIT Group of Institutions which includes KiiT University, Kalinga Institute of Social Sciences (KISS), KIIT International School, Kalinga Institute of Medical Sciences (KIMS), KIIT School of Management (KSOM) etc.
  --Or--
  Select a Field of Study
  Select a Course
  Select UPSC Exam
  Select IBPS Exam
  Select Entrance Exam

  உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
  Tamil Careerindia

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more