இளம் விஞ்ஞானிகளை அழைக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்!

Posted By:

சென்னை: விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பல்வேறு பணியிட வாய்ப்புகள் விருப்பமுள்ளவர்களுக்காகக் காத்திருக்கின்றன.

இந்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். இந்த மையத்தில் சயின்டிஸ்ட், பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் விஞ்ஞானிகளை அழைக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்!

இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க முடியாது.

சயின்ஸ்டிஸ்ட் அல்லது என்ஜினீயர் பதவிக்கு(எஸ்டி-01 பிரிவு) ரூ.15,600-ரூ.39,100 பிளஸ் ரூ,6,600 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய Analytical, Organic, Physical, Polymer Chemistry துறையில் எம்.எஸ்சி பட்டம் பெற்று NMR Spectroscopy-யை முதன்மை பாடமாக கொண்ட Chemistry, Material Science பிரிவில் முனைவர் பட்டமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியமாகிறது.

ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவ வேண்டும். http://www.vssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை நிறைவு செய்து அனுப்பலாம்.

இம்மாதம் 24-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்தப் பணியிடங்கள் தொடர்பான முழுமையான விவரங்களைப் பெற http://www.vssc.gov.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
Vikram Sarabhai Space Centre has invites applications from scientists and Engineers. For more details scientista can logon into http://www.vssc.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia