தமிழ்நாடு மின்சார வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு காத்திருக்கும் பணிகள்!!

Posted By:

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.

தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவதன் மூலம் பணியில் சேர முடியும்.

இந்தத் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்பட உள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் என்ஜினீயர்களுக்கு காத்திருக்கும் பணிகள்!!

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்தொடரமைப்பு கழகம், மின்உற்பத்தி, மின்பகிர்மான கழகம் ஆகிய துறைகளில் உதவி என்ஜினீயர்கள் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன.

இந்த இடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2016 ஜனவரி 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எழுத்துத் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தேர்வு குறித்த விவரங்களை www.tangedco.gov.in என்ற மின்சார வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

English summary
Tamilnadu Electric Board has invited applications from the aspirants for the post assistant engineers. They should send the applications through online. for more details aspirants can logon into www.tangedco.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia