நீங்கள் வீடியோ ஒளிப்பதிவாளரா...? உங்களுக்கு தமிழ்வளர்ச்சித்துறையில் வேலை இருக்கு...!

Posted By:

சென்னை: வீடியோ ஒளிப்பதிவாளருக்கு தமிழ் வளர்ச்சித்துறையில் வேலை காலியாக உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடம் தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் காலியாக உள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. தமிழ்நாடு திரைப்படப் பிரிவில் காலியாக உள்ள 1 வீடியோ ஒளிப்பதிவாளர் (Video Cameraman) பணியிடம் மற்றும் ஆளுநர் மாளிகையில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை யால் புதியதாக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ ஒளிப்பதிவாளர் பணியிடம் ஆகியவற்றை நிரப்ப இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவர்களுக்கு ஊதியமாக ரூ.9,300 -34,800 பிளஸ் தர ஊதியம் ரூ.4,500 வழங்கப்படும்.

நீங்கள் வீடியோ ஒளிப்பதிவாளரா...? உங்களுக்கு தமிழ்வளர்ச்சித்துறையில் வேலை இருக்கு...!

இன சுழற்சி முறை: மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்), ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) (முன்னுரிமை பெற்றவர்) ஆகியோர் இந்தப் பணியிடங்களுக்கு முன்னுரி பற்றவர்களாகவர்.

தமிழ்நாடு திரைப்படப் பிரிவு, தரமணி, சென்னை -113, மேதகு ஆளுநர் மாளிகை, கிண்டி, சென்னை -22 என்ற முகவரியில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்.

ஒளிப்பதிவு(Cinematography) அல்லது ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் (Sound Recording & Sound Engineering) பிரிவில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட திரைப்பட தொழில்நுட்ப பட்டயம் (A Diploma in Filim Technology (Cinematography or Sound Recording & Sound Engineering) அல்லது பூனாவில் அமைந்துள்ள இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு மற்றும் ஒலிப்பொறியியல் பிரிவில் பட்டயம் (மற்றும்) ஆவணப் பட தயாரிப்பு (அல்லது) செய்தி ஆவணப்படம், தொலைக்காட்சிப் படம் மற்றும் விளம்பரப்படங்கள் தயாரிக்கும் வீடியோ தயாரிப்பு நிறுவனத்தில் ஒளிப்படத் தொகுப்பில் Umatic ஒளிப்பதிவு கருவியை கையாள்வதில் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது 18 - 35க்குள் இருக்க வேண்டும். முன்னாள் ராணுவத்தினருக்கு வயதுவரம்பு இல்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு ஜனவரி 31-க்குள் அனுப்பவேண்டும்.

English summary
Tamilnadu tamil Development Department has invited applications from Videographers post in the department. Totally 2 posts has been vacant in the dapartment. Aspirants can send their applications before january 31.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia