ஏராளமான பணியிடங்கள் காலியா இருக்கு...! அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம்...!!

Posted By:

சென்னை: பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளதாக பணியாளர் தேர்வாணையம் (Staff Section Commission) அறிவித்துள்ளது.

உதவி பிரிவு அதிகாரி, புலனாய்வுத் துறை, மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை, ரயில்வே துறை, வெளியுறவுத்துறை, பல்வேறு அமைச்சகங்கள், வருமான வரித்துறை, சென்டிரல் எக்ஸைஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

ஏராளமான பணியிடங்கள் காலியா இருக்கு...! அழைக்கிறது பணியாளர் தேர்வாணையம்...!!

இந்தப் பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த தேர்வு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.100 வசூலிக்கப்படும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினருக்கு இந்தக் கட்டணம் கிடையாது.

இதற்கான தேர்வு மையங்கள் சென்னை, புதுச்சேரி, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை நகரங்களில் அமைக்கப்படும்.

எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களுக்கு http://ssconline2.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

English summary
Staff Section Commission will conduct Combined Graduate Level Examination 2016 for various posts. For more details aspirants can log on into http://ssconline2.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia