தெற்கு ரயில்வேயில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

Posted By:

சென்னை: தெற்கு ரயில்வேயில் கூட்ஸ் கார்ட், டைப்பிஸ்ட், ஸ்டேஷன் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதியும், திறமையும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்காக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!!

மொத்தம் 976 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கமர்ஷியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், கூட்ஸ் கார்ட், டைப்பிஸ்ட், உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு வயதுவரம்பு 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகள் உண்டு.

அனைத்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பு சலுகையில் தளர்வு வழங்கப்படும்.

பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக பெறப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

http;//www.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பித் தரவேண்டும்.

கூடுதல் விவரங்கள் அறிய http://rrbsecunderabad.nic.in/CEN_03_2015.pdf, என்ற லிங்க்கை தொடர்புகொள்ளலாம்.

English summary
Railway Recruitment Boards invited applications for 796 Assistant Station Master & other Posts. The eligible candidates can apply to the post through the prescribed format on or before 25 January 2016. Details in this regard can be found from the websites of all participating RRBs.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia