இசைக் கலைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை ரெடி!!

Posted By:

டெல்லி: இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் பணியாற்ற இசைக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையில் மொத்தம் 246 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இசைக் கலைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை ரெடி!!

ஆண்களுக்கு 221 இடங்களும், பெண்களுக்கு 25 இடங்களும் காலியாகவுள்ளன. மாத சம்பளமாக ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000 என்ற விகிதத்தில் தரப்படும். இந்த வேலையில் சேர பத்தாம் வகுப்பு படித்திருக்கவேண்டும். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள இசைக் கருவியை இசைப்பதில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

01.07.2016 தேதியின்படி வயதுவரம்பு 18-க்குள் இருக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணமாக ரூ.50 பெறப்படும்.

இதை இந்திய அஞ்சல் ஆணை அல்லது Financial Advisor & Chief Accounts Officer, East Central Railway, Hajipur என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்.சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு இந்தக் கட்டணம் கிடையாது.

அதிகாரப்பூர்வ இணையதளமான www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் HaJipur, HQ - Security என்ற லிங்க்கில் உள்ள வழிகாட்டுதலின் படி ஏ4 அளவு காகிதத்தில் தயாரித்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

IG-Chief Security Commissioner, East Central Railway, Hajipur, Pin Code - 844101, Bihar.

கல்வித் தகுதி, சம்பளம், வயதுச் சலுகை போன்ற கூடுதல் விவரங்கள் அறிய http://www.ecr.indianrailways.gov.in/uploads/files/1456204835297-A1.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

English summary
Railway has been inviting applications for the post of musicians in Railway. Selected people will be recruited in Railway Police Force and special force. for more details aspirants can logon into http://www.ecr.indianrailways.gov.in/uploads/files/1456204835297-A1.pdf.,

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia