ரயில்டெல் கழகத்தில் பணியாற்ற வேண்டுமா?

Posted By:

சென்னை: ரயில்டெல் கழகத்தில் டெக்னீஷியன் உள்ளிட்ட பணிகளுக்கான காலியிடம் அறிவிக்கப்பட்டுளள்ளது.

மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது இந்திய ரயில்டெல் கழகம். இந்த கழகத்தில் 3 வருட ஒப்பந்த அடிப்படையில் டெக்னீசியன் பணிக்கான காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

டெக்னீஷியன் (ஆப்பரேஷன் அண்ட் மெயின்டனென்ஸ்) பிரிவில் 25 காலியிடங்கள் உள்ளன. வடக்கு பிராந்தியமான காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், ராஜஸ்தான் (ஒரு பகுதி), உத்தரப் பிரதேசம் (ஒரு பகுதி), உத்தராஞ்சல், தில்லி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவர்.

ரூ. 20,200 + இபிஎஃப் மற்றும் இதர சலுகைகள் இந்தப் பணியிடங்களுக்கு அளிக்கப்படும்.

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்பர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன், டெலி கம்யூனிகேஷன் பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் , கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி அல்லது எம்சிஏ அல்லது பிசிஏ முடித்திருக்க வேண்டும். இத்துடன் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவத்துடன் சிசிஎன்ஏ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: RailTel Corporation of India Limited, 6th Floor, Block -III, Delhi IT Park, Shastri Park, Delhi - 110053.

விண்ணப்பங்கள் செப்டம்பர் 2-ம் தேதிக்குள் சென்று சேருமாறு அனுப்பவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.railtelindia.com என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
Railtel Corporation has invited applications for post of Technicians. For more details aspirants can logon onto www.railtelindia.com

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia