புதுவை பாரதியார் கிராம வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!

Posted By:

சென்னை: புதுவையிலுள்ள பாரதியார் கிராம வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

வங்கியில் தற்போது அதிகாரி மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுவை பாரதியார் கிராம வங்கியில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!

புதுவை பாரதியார் கிராம வங்கியில் அதிகாரிகள் நிலையில் 7 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

மேலும் அலுவலக உதவியாளர் நிலையில் 8 பணியிடங்கள் காலியாகவுள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் வயது வரம்பு: 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது அவர்கள் 03.06.1986 - 31.05.1996க்குள் பிறந்திருக்க வேண்டும்.

மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஐபிபிஎஸ் நடத்திய செப்டம்பர்/ அக்டோபர் 2014 வங்கி தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. கட்டணாக வசூலிக்கப்டும். மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்படும். இதனை சலானை பயன்படுத்தி புதுவை பாரதியார் கிராம வங்கி கிளைகளில் செலுத்தலாம்.

www.puduvaibharathiargramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

வரும் 28-ம் தேதிக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் செப்டம்பர் 12-ம் தேதிக்குள் சென்று சேரவேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை http://www.puduvaibharathiargramabank.in:81/pdfs/pud_rec_13082015.pdf என்ற இணையதள லிங்க்கில் தொடர்புகொண்டு காணலாம்.

English summary
Puduvai Bharathiyar Grameena bank has invited applications for the post of officer and office assistant. Fro more details aspirants can logon into http://www.puduvaibharathiargramabank.in:81/pdfs/pud_rec_13082015.pdf

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia