தமிழக அரசின் இனிப்பான அறிவிப்பு டிரைவர், கண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் போக்குவரத்து கழகத்திற்கு புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது இந்தத் தகவலை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பதில்:
தமிழ்நாட்டில் பல வழித்தடங்களில் பஸ்கள் கொரோனா காலங்களில் நிறுத்தப்பட்டன. இதற்கு காரணம் அப்போதைய ஆட்சியில் போதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இல்லாததே.

இந்நிலையில், தற்போது தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிய ஓட்டுநர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு எழுத்து தேர்வு முடிவு பெற்று நேர்காணல் முடிந்துள்ளது.
அவர்களுக்கான பணி நியமன ஆணையம் விரைவில் வழங்கப்பட உள்ளது. அடுத்ததாக மற்ற போக்குவரத்து கழகங்களுக்கு டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை பணிக்கு எடுப்பதற்கு முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவடைந்த பிறகு புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் மாநிலத்தில் இதற்கான தேர்வெழுதி காத்திருக்கும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications












