என்ஐஏ-வில் பணிபுரிய விருப்பமா?

Posted By:

சென்னை: தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ. புலனாய்வு அமைப்பானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. உளவுப் பணிகளில் ஈடுபடும் இந்த அமைப்பில் தற்போது புதுடெல்லி அலுவலகத்தில் ஸ்டெனோகிராபர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. டெபுடேசன் பணியிடங்களான இது மத்திய- மாநில அரசு பணியாளர்களை கொண்டு நிரப்பப்படுகிறது.

என்ஐஏ-வில் பணிபுரிய விருப்பமா?

இன்ஸ்பெக்டர் பணிக்கு 30 பேரும், சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 11 பேரும், ஸ்டெனோகிராபர் பணிக்கு 15 பேரும் தேர்வு செய்ப்படவுள்ளனர்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதி, பணி அனுபவம், விண்ணப்பம் செய்ய வேண்டிய தேதி உள்ளிட்ட விவரங்கள் என்.ஐ.ஏ.வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும்.

இந்த அறிவிப்பு வெளியான 2 மாதங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய அறிவிப்பை அக்டோபர் 3-9 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் காண முடியும்.

மேலும் விவரங்களுக்கு www.nia.gov.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
Nationla Investigation Agency (NIA) has announced to fill Stenographer, Inspector, Sub-Inspector posts. For more details aspirants can logon in to www.nia.gov.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia