நீங்கள் ஐடிஐ படித்தவர்களா...? அப்படின்னா கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் வேலை இருக்கு...

Posted By:

சென்னை: விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பற்படை கப்பல் கட்டும் தளத்தில் ஐடிஐ முடித்தவர்கள் அப்ரண்டீஸ் வேலை காத்திருப்பதாக அறிவிக்க்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறையின் கீழ் இந்த கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. இங்கு ஐடிஐ முடித்தவர்களுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி, உதவித்தொகையுடன் வழங்கப்படுகிறது. இதற்காக விண்ணப்பங்களை ஐடிஐ முடித்த இளைஞர்கள் அனுப்பலாம். இந்தப் பயிற்சிக்காலம் ஓராண்டு ஆகும்.

நீங்கள் ஐடிஐ படித்தவர்களா...? அப்படின்னா கப்பல் கட்டும் தளத்தில் அப்ரண்டீஸ் வேலை இருக்கு...

எலக்ட்ரீசியன்- 35, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் - 25, பிட்டர் - 30, இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் - 18, மெஷினிஸ்ட் - 20, மெக்கானிக் மெஷின் டூல் மெயின்டெனன்ஸ் (எம்எம்டிஎம்) - 06, பெயின்டர் (பொது) - 12, ரெப்ரிஜிரேசன் மற்றும் ஏர் கண்டிஷனிங் மெக்கானிக் - 18, வெல்டர் (கேஸ் மற்றும் எலக்ட்ரிக்) - 18 ஆகிய பிரிவுகளில் அப்ரண்டீஸ் பயிற்சியளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சிக்கு 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட தொழிற் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். எலக்ட்ரானிக் மெக்கானிக் தொழிற் பிரிவிற்கு ரேடியோ மற்றும் டிவி மெக்கானிக் தொழிற் பிரிவில் ஐடிஐ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகையுடன் தேர்வு செய்யப்படுவர்களுக்கு பயிற்சியின் போது உதவித் தொகை மாதம் ரூ.7,036 அல்லது ரூ.7,916 வழங்கப்படும். பயிற்சி கால அளவைப் பொறுத்து உதவித்தொகையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்

பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விசாகப்பட்டினத்தில் தேர்வு நடைபெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Officer-in-Charge, (For Apprenticeship Enrolment), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., Post Office, Visakhapatnam- 530 014. ANDHRA PRADESH என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2015. எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.02.2016. மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் அறிய http://indiannavy.nic.in/content/naval-dockyard-visakhapatnam என்ற இணையதளத்தை காணலாம்.

English summary
The Officer-in-Charge, (For Apprenticeship Enrolment), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., Post Office, Visakhapatnam- 530 014. ANDHRA PRADESH என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.12.2015. எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.02.2016. மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் அறிய http://indiannavy.nic.in/content/naval-dockyard-visakhapatnam என்ற இணையதளத்தை காணலாம்.Apprentice Training will be given to ITI students in Naval Dockyard Apprentices School, Andhra Pradesh. For more details aspirants can logon into http://indiannavy.nic.in/content/naval-dockyard-visakhapatnam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia