மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

Posted By:

சென்னை: மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின்(டிஆர்டிஓ) கீழ் உள்ள நிறுவனத்தில் பணியாற்ற ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது.

டிஆர்டிஓ நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS) நிலையத்தில் ஆராய்ச்சி பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

இந்த ஆராய்ச்சி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த ஆராய்ச்சியில் பணிபுரிய JRF (CSIR/UGC/DST-ல் Fellow Ship சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டியது அவசியமாகும். மொத்தம் 12 இடங்கள் காலியாகவுள்ளன.

1. Biotech/Biochem/Biomed Sc - 06, 2. Chem/Nanotech - 04, 3.Coputer Science/Electronics - 01,

4. Pharma - 01 என மொத்தம் 12 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாதம் ரூ.25,000 மற்றும் வீட்டு வாடகை படி என ஊதியம் இருக்கும். விண்ணப்பம் செய்பவர்களின் வயது 28க்குள் இருக்க வேண்டும்.

பணிக்காலம் மொத்தம் 5 வருடங்களாக இருக்கும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.drdo.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து inmaslibrary@inmas.drdo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பத்தினை அனுப்ப ஆகஸ்ட் 28 கடைசி தேதியாகும்.

இதற்கான நேர்முகத் தேர்வு ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெறும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

English summary
Institute of Nuclear Medicine and Allied Sciences (INMAS), Delhi under the aegis of Defence Research and Development Organisation (DRDO), is engaged in research and developmental work in radiation sciences, and Medical Image Processing. Applications are invited from candidates possessing suitable qualifications:

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia