இந்திய ராணுவத்தில் பணியாற்ற விருப்பமா? ஆன்-லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted By:

சென்னை: இந்திய ராணுவத்தில் பணிபுரிய விருப்பமாக இருப்பவர்கள் இன்று முதல் இணையதளத்தில் ஆன்-லைன் மூலம்(ஜூலை 31) முதல் விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிக் கடிதம் அனுப்பப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்ற விருப்பமா? ஆன்-லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஏழு மாவட்டங்கள், புதுச்சேரி மாநிலத்தில் உள்ளவர்களும் இந்த ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இதற்கான தேர்வு வரும் செப்டம்பர் 4 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்வுக்கு ராணுவத்தின் இணையதளத்தின் (www.joinindianarmy.nic.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ராணுவப் படை வீரர்கள், இளநிலை அலுவலர்கள் ஆகிய பணியிடங்களில் காலியாகவுள்ள 700-க்கும் மேற்பட்ட இடங்களுக்காக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. அதில் பங்கேற்க, ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

இந்த ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஜூலை 31-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 19-ல் நிறைவடைகிறது. விண்ணப்பதாரர்கள் அதிகளவு விண்ணப்பித்தால், கடைசி தேதி நீட்டிக்கப்படும். செல்லிடப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றை பயன்படுத்தியும் ராணுவ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

ராணுவ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்தவுடன், சில நாள்களில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்படும். அதனைப் பதிவிறக்கம் செய்து ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்துக்கு எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் முகாமில் பங்கேற்கும் தேதி, நேரம் ஆகியவை அந்த அனுமதிக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும

இணையதளத்தில் விண்ணப்பிக்கும்போது தகவல்களை கவனமாக பதிவு செய்யவேண்டும். குறிப்பாக, கல்வித் தகுதி, பிறந்த தேதி, முகவரி ஆகிய விவரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். ஒருமுறை தகவல்களைப் பதிவு செய்தால் அதனை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது என்பதால் கவனத்துடன் பதிவு செய்தல் நலம்.

ஆள்சேர்ப்பு முகாமானது, புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

ஆள்சேர்ப்பு முகாமில், முதல் கட்டத் தேர்வாக 1.6 கிலோமீட்டர் தூரத்தை 5.4 நிமிஷங்களில் ஓட வேண்டும். இதன்பின், உயரம், எடை, மார்பளவு ஆகியன அளவிடப்பட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவர். இதைத் தொடர்ந்து, எழுத்துத் தேர்வும் நடைபெறும். இந்தத் தேர்வு அக்டோபர், நவம்பர் மாதங்களின் கடைசி ஞாயிறன்று நடத்தப்படும்.

English summary
Recruitment will take place in Indian army for the people of 7 districts in Tamilnadu and Puducherry Union Terrorory. For more details youths can logon into www.joinindianarmy.nic.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia