இந்திய விமானப்படையில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!!

சென்னை: இந்திய விமானப்படையில் கமிஷன்ட் ஆபீஸர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆண், பெண் இருவருமே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பிளையிங் பிராஞ்ச் பிரிவில் கமிஷன்ட் ஆபீஸர்(Commissioned Officer) பணியிடங்கள் காலியாகவுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது

இந்திய விமானப்படையில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!!

இந்தப் பணியிடங்களுக்கு 01.01.2017 தேதியின்படி வயதுவரம்பானது 20 - 24க்குள் இருக்க வேண்டும்.

60 சதவீத மதிப்பெண்களுடன் கணிதப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல டெக்னிக்கல் பிராஞ்ச் பிரிவிலும் கமிஷன்ட் ஆபீஸர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணிகளுக்கு வயதுவரம்பு: 20 முதல் 26-க்குள் இருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் போன்ற பாடங்களை முக்கிய பாடமாக கொண்டு Aeronautical Engineering படிப்பை முடித்து பி.இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

இதேபோல கிரவுண்ட் டூட்டி பிராஞ்ச் பிரிவில் Commissioned Officers பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பணியிடங்களுக்காக ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.காம், எம்.காம், சிஏ, ஐசிடபுள்ஏ முடித்திருக்க வேண்டும். இந்திய விமானப்படையின் கல்விப்பிரிவில் பணிபுரிய குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்தப் பணியிடங்களுக்காக இந்திய விமானப்படையால் நடத்தப்படும் Air Force Common Admission Test (AFCAT)-2016 தகுதித்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதற்காக அடுத்த ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும்.

இதற்காக தமிழகத்தில் எழுத்துத் தேர்வு மையங்கள் சென்னை, கோவை(சூலூர்), தஞ்சாவூரில் அமைக்கப்படும்.

இப்பணியிடங்களுக்கு www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2015 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு www.careerairforce.nic.in என்ற இணையதளத்தைக் காணலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Indian airforce has invited applications for the post of Commissioned Officer. Aspirants can logon into www.careerairforce.nic.in for more details.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X