இனி இணையதளம் மூலமாக இந்திய ரயில்வே ஆள்சேர்ப்பு பணிகள்!!

Posted By:

சென்னை: இனி ரயில்வே துறைக்கு இணையதளம் மூலம் ஆள் எடுக்கும் பணிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக ரயில்வேக்கு நாடு முழுவதும் என்ஜினீயர் பிரிவில் காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

இனி இணையதளம் மூலமாக இந்திய ரயில்வே ஆள்சேர்ப்பு பணிகள்!!

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில்வே துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 3,273 என்ஜினீயர் பணியிடங்களுக்கு இணையதளம் வழியாக தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறும்.

நாட்டிலேயே முதன்முறையாக ரயில்வேக்கு ஆன்-லைனில் ஆள்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த ஆன்லைன் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாகவே பரிசீலிக்கப்பட்டன. நாடு முழுவதும் 242 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற்று வருகிறது.

இதுபோன்று இணைதளம் மூலம் தேர்வை நடத்துவது வெளிப்படைத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் அதிகப்படுத்தும்.

இவ்வாறு அந்த ரயில்வே நிர்வாகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
For the first time, Railway Recruitment Boards are conducting examinations online to fill up more than 3,000 vacancies of engineers. The all-India examinations for 3,273 vacancies of Senior Section Engineers and Junior Engineers are being held online from August 26 to September 4, railways said in a statement.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia