மீன்வளத்துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!

Posted By:

சென்னை: தமிழ்நாடு மீன்வளத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மீன்வளத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் சுனாமி திட்ட செயலாக்க அலுவலகத்தில் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள தொழில் அலுவலர், தொழில் நுட்ப உதவியாளர், கணினி இயக்குபவர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மீன்வளத்துறையில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!

தொழில் அலுவலர் பணியிடம் ஒன்று காலியாகவுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு மாதம் ரூ12 ஆயிரம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். வரைதொழில் அலுவலர் பணி அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல பணிஉதவியாளர் பணியிடம் ஒன்றும் காலியாகவுள்ளது.இந்தப் பணியிடத்துக்கு ரூ.8 ஆயிரம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்

இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் கண்காணிப்பாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இதே போல ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணியிடமும், 2 கணினி இயக்குபவர் பணியிடமும் காலியாகவுள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களை விவரங்களைத் தயார் செய்து கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவ சான்றுகளின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மீன்துறை ஆணையர், சுனாமி திட்ட செயலாக்க அலகு, 485, அண்ணா சாலை, நந்தனம், சென்னை - 600035 என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்.

ஆகஸ்ட் 20-க்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

English summary
Recruitment will be done in Tamilnadu Government Fisheries department. jobs has been created in the Tsunami plan execution section.
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia